யாழில் இடம்பெயர்ந்து மானிப்பாய் பகுதியில் நலன்புரி முகாம்களில் வசிக்கும் 13 வயது பாடசாலை சிறுவனை கறுப்பு வானில் சென்றவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். எனினும் சிறுவனின் தயாராரும் கத்தி குழறியதையடுத்து அச்சிறுவனை படைமுகாம் ஒன்றுக்கு அருகில் அரைகுறை மயக்கமான நிலையில் விட்டுச்சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுவதாகவும் இதுதொடர்பில் காவல்துறையினர் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை வலிகாமம் பகுதியைச் சேர்ந்த 2 குடும்பத்தவர்கள் கப்பம் பெறும் இலக்காக கடத்தப்பட்டு உள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். மகேஸ்வரன் என்பவரை 50 லட்சம் கப்பம் கோரியும், மகேந்திரன் என்பவரை 20 லட்சம் கப்பம் கோரியும் கடத்தப்பட்டு உள்ளதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர். இதில் மகேஸ்வரன் வாகன திருத்தும் தொழிலக உரிமையாளர் எனவும் மகேந்திரன் மின்சார தொழில்நுட்பவியலாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment