Tuesday, April 20, 2010

கீரிமலையில் ஈமைக்கிரியைக்கு படையினர் தடை - டக்ளசை மதிக்காத படையினர்


யாழ் மாவட்ட மக்கள் இறந்த தமது உறவுகளுக்கு அஸ்தி கரைத்து ஈமைக்கிரியை செய்யும் கீரிமலையில், ஈமைக்கிரியை செய்ய அங்கு ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்கா படையினர் தடை விதித்துள்ளனர்.

கீரிமலை உட்பட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகள் சிங்கள சுற்றுலாப் பயணிகளின் கண்காட்சி இடமாக மாறியிருப்பதால், அங்கு அஸ'தி கரைக்கக்கூடாது என தடை விதித்துள்ள படையினர் அது பற்றிய எச்சரிக்கைப் பதாகை ஒன்றையும் நிறுவியுள்ளனர்.

சிறீலங்கா படையினரது இந்த நடவடிக்கை தொடர்பாக யாழ் கட்டளைத் தளபதியிடம் முறையிடுவதற்கு யாழ் இந்து அமைப்புக்கள் எண்ணியுள்ளன.

இதேவேளை, மகிந்த அரசில் அங்கம் வகிக்கும் துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் தலைவரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கீரிமலைக்குச் சென்றிருந்ததுடன், அங்கிருந்த படையினரது அறிவுறுத்தல் பதாகையை தனது அடியாட்கள் மூலம் அகற்றியிருந்தார்.

இருப்பினும் தற்பொழுது சீமெந்தினால் அதே இடத்தில் சிறீலங்கா படையினர் கடலில் அஸ்தி கரைக்கக்கூடாது என்ற அறிவுறுத்தல் எச்சரிக்கைப் பதாகையை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment