Friday, April 9, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3ஆவது பெரிய கட்சியாகத் தெரிவு வடக்கு, கிழக்கில் மொத்தம் 13 ஆசனங்கள்

வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழர சுக் கட்சி) மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளது. யாழ்ப்பாணம்,ஏப்ரல்10
வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழர சுக் கட்சி) மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளது.
வடக்கு, கிழக்கில் 13 ஆசனங்களைப் பெற்றுள்ள இக்கட்சியில் தேசியப் பட்டியல் உறுப்பினர் களையும் சேர்த்து 15 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் 13 ஆச னங்களைப் பெற்றுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் 5 ஆசனங் களையும் வன்னியில் 3 ஆசனங்களை யும்கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆசனங்களையும், அம்பாறையில் ஓர் ஆசனத்தையும், திருகோணமலையில் ஓர் ஆசனத்தையும் கூட்டமைப்பு பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் கும் புறுப்பிட்டியில் மறுவாக்களிப்புக்கு உத்தர விடப்பட்டுள்ள போதிலும், அங்கு வெற்றி பெற்ற இரா.சம்பந்தனின் தெரிவைப் பாதிக்காது என்று விடயமறிந்த வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.
2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் மட்டக்களப்பில் ஓர் ஆசனத்தை இழந்துள்ளது.
அதேபோல் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் எட்டு ஆசனங்களைப் பெற்றிருந்த கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் 5 ஆசனங்களை மட் டுமே பெற்றுள்ளது.
வன்னியில் 2004ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டமைப்பு 5 ஆசனங்களைப் பெற்றிருந் தது. இம்முறை தேர்தலில் 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

வன்னி
பெற்றவாக்குகள் கிடைத்த ஆசனங்கள்
தமிரசுக் கட்சி 41,673 3
ஐ.ம.சு.கூ 37,522 2
ஐ.தே.க. 12,783 1

மொத்தவாக்குகள் 266,975
அளிக்கப்பட்ட வாக்குகள் 117,185
நிராகரிக்கப்பட்டவை 10,208

மட்டக்களப்பு
பெற்றவாக்குகள் கிடைத்த ஆசனங்கள்
தமிரசுக் கட்சி 66,235 3
ஐ.ம.சு.கூ 62,009 1
ஐ.தே.க. 22,935 1
த.ம.வி.பு 16,886 0

மொத்தவாக்குகள் 333,644
அளிக்கப்பட்ட வாக்குகள் 195,967
நிராகரிக்கப்பட்டவை 14,749

அம்பாறை (திகாமடுல்ல)
பெற்றவாக்குகள் கிடைத்த ஆசனங்கள்
தமிரசுக் கட்சி 26,895 1
ஐ.ம.சு.கூ 132,096 4
ஐ.தே.க. 90,757 2

மொத்தவாக்குகள் 420,835
அளிக்கப்பட்ட வாக்குகள் 272,462
நிராகரிக்கப்பட்டவை 15,516

No comments:

Post a Comment