Tuesday, April 27, 2010

நித்யானந்தா சாமியாருக்கு திடீர் நெஞ்சுவலி: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி


பெங்களூரு: பெங்களூரு போலீசாரின் காவலில் இருந்து வரும் நித்யானந்தா சாமியாருக்கு, நேற்று திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் புகாரில், கைது செய்யப்பட்டுள்ள நித்யானந்தா சாமியாரை, பெங்களூரு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். நேற்றுடன் 4 நாள் காவல் முடிவடைந்ததையடுத்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, மேலும் 2 நாட்கள் காவல் நீட்டிப்பு பெற்றனர். பின்னர், அவரை விசாரணைக்காக அழைத்து சென்றபோது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக நித்யானந்தா கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி மற்றும் ரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, போலீசார் கைப்பற்றியுள்ள சி.டி.யில், நித்யானந்தா புலித்தோலினால் ஆன பெல்ட் மற்றும் சிறுத்தைப்புலி, புள்ளிமான் போன்ற விலங்குகளின் தோலை பயன்படுத்தியிருக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த சி.டி.யை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், நித்யானந்தாவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. இந்தாள் தப்புவதற்காக எண்ணைச்சட்டியில் இருந்து அடுப்புக்குள் குதித்ததுபோல் வைத்தியசாலையுள்
    நெஞ்சு நோ என போயுள்ளது. அங்கு யாராவது இவர் பாலியல் ஆய்வு செய்த வைத்தியர்களோ? தாதிமாரோ இருந்தால் ஒரேயடியாக மேலே அனுப்பப் போகிறார்கள்.அப்படி யாரும் செய்தால் அது
    தப்புக் கூட இல்லை.

    ReplyDelete