Monday, April 5, 2010

சாவகச்சேரி கள்ளுத்தவறணை காமெடி



தற்போது யாழ்ப்பாணத்தில் போனவன் வந்தவன் எல்லாரும் பொது தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.அவர்களில் ஒருவர்தான் சாவகச்சேரி குட்டி விதானை.இவர் சுயேட்சைக்குழுவில் போட்டியிடுகிறார்.இவரது அன்றாட கருமங்களில் ஒன்று மாலையில் கட்டாயம் சாவகச்சேரி " நவீனம் கள்ளுத்தவறணையில் " அட்டெண்டன்ஸ் போடுவது தான்.அண்மைக்காலமாக இவரது செலவில் தான் பல சாவகச்சேரி குடிமகன்களில் வயிற்றில் பால் (பனம்பால்) கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் உச்சக்கட்ட பிரச்சாரம் நற்குடிமகன்களின் மத்தியில் நடந்திருக்கிறது.அதில் இவர் சொன்ன கருத்து உங்களுக்காக

" இந்த குட்டி விதானை உங்களுக்கு இவ்வளவு நாளும் செய்தது சரியா தவறா???

ஏகோபித்த குரல்கள் அனைத்தும் தவறென்றே'

அப்ப சரி நீங்க போய் குட்டி விதானையோட நம்பருக்கு பக்கத்தில தவறு எண்டு
( X ) போட்டிட்டு வாங்கோ எண்டாறாம் ...

நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு...

No comments:

Post a Comment