Thursday, April 1, 2010

சுறா பட பாடல் அனைத்துமே மணிசர்மாவின் தெலுங்கு பாடல்களின் கொப்பிகள்

என்ன கொடுமை விஜய்???????

விஜய்க்கு 50 வது படம், ரொம்ம்ப்ப்ப எதிர்பார்ப்பு இருக்கு. ஆனா ஏன் இப்ப கூட தெலுங்குல இருந்து அப்படியே பாட்டுக்களை இறக்கியிருக்காங்கன்னு தெரியல. 50வதுபடம்னா தனியா தெரிய வேணாமா? சரி, வியாபாரம் ஒன்னு இருக்கே, அதுல வரலாறு புவியியல் எல்லாமா பார்க்க முடியும்? விஜய் சார், ரிஸ்க் எடுங்க சார். நேத்து வந்த பொடிப்பசங்க எல்லாம் பின்னி பெடல் எடுக்குறாங்க எவ்ளோ நாளைக்குதான் நீங்க இப்படி பயந்து பயந்து காப்பி அடிப்பிங்க. அங்கே வெற்றியடைஞ்சா இங்கேயுமா ஆவும்? உங்க வரலாறு உங்களுக்குத் தெரியாதா? மக்களே தெலுங்கு பதிப்பின் காணொளியை இணைச்சிருக்கேன், பார்த்துக்குங்க. ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் பாட்டுக்கள் வேட்டைக்காரனைவிட பரவாயில்லை.

விஜய்க்கு
நான் நடந்தால் அதிரடி

Singer: Naveen, Shoba Chandrasekar, Janani Madhan
Lyricist: Kabilan


பில்லாவுக்குப் பின்னாடி Heavy Rock கிதாருல போட்டாவே அது அஜித் கோட் ஒன்ன மாட்டிகிட்டு நடந்து போற மாதிரிதான் மனசுல வருது. இந்தப் பாட்டோட ஆரம்பமும் அப்படித்தான் இருக்கு.”நான் நடந்தால் அதிரடி”, என்ன கொடுமைசார் இது.. இது அஜித் பாட்டா? விஜய் பாட்டா? என்ன பண்ண தெலுங்கு பில்லாவுல மை நேம் இஸ் பில்லா பாட்டு ஆச்சுங்களே. என்ன ஒரு சேலஞ்ச்னா, இதுல விஜய் நடந்ந்ந்ந்ந்ந்தே போவாரா இல்லாட்டி ஆட்டம்போடுவாரான்னு தெரியல. விஜய் கொஞ்சம் கவனிச்சிருக்க வேண்டிய பாட்டு இது. யாரு ஜால்ரா அடிச்சாலும் அதை சமாளிச்சு தன்னோட சபையடைக்கத்தை பார்த்துக்கனும். ”நான் ஜொலிக்கும் நட்சத்திரம்” இந்த வரிய நீக்கியிருக்கலாம். ஏற்கனவே இருக்கிற பேருக்கு இப்படி ஒரு வரி தேவையா? கபிலன் சார், தலைக்கனம் ஏறாத விஜய்க்கு இப்படி ஒரு வரியா? என் கண்டங்கள்.


பொம்மாயி
Singers: Hemachandra and Saindhavi
Lyricist: Na. Muthukumar


கபிலன் பல பாட்டுக்களை எழுதியிருந்தாலும், ஒரே பாட்டுல சிக்ஸர் அடிச்சுட்டு போயிட்டாரு நா.முத்துகுமார். அதுதான் நா.மு. இந்தப் பாட்ட வேட்டைக்காரன்ல அனுஷ்காவுக்கு போட்டிருந்தா செமையா செட் ஆகியிருக்கும். எனக்குப் பிடிச்ச பாட்டும் இதுதான். இதுவரைக்கும் ஒரு 20 முறை கேட்டிருப்பேன். இது டிபிக்கல் விஜய் பாட்டு, இதுதான் விஜய்க்குத் தேவையான பாட்டு. செம, செம, செம, சூப்பர் பேக்கேஜ். சைந்தவிக்கு எப்படித்தான் இப்படியாப்பட்ட நல்ல பாட்டுங்க மாட்டுதோ தெரியல. ஹேமசந்திராவின் குரல் இனிமை. விஜய் இந்தப் பாட்டுக்கு எப்படி ஆடியிருப்பாருன்னு பார்க்க இப்பவே ஆவலா இருக்கேன். துள்ளலான காதல்வெற்றி கொடியேத்து
Singers: Ranjith and Mukesh
Lyricist: Vaali, S.P. Raajakumar


ஓபனிங் பாட்டு போல, மணி சர்மா, மின்சார கண்ணா பாட்டு பார்த்துட்டு தெலுங்குல போட்டிருப்பாரு போல, அப்படியே தமிழுக்கும் வந்திருச்சுங்க. “இருந்தாக்கா தென்றல் காற்றுதான், எழுந்தாக்கா சூறைக் காற்றுதான். அட போங்கப்பா.

தமிழன் வீரத்தமிழன்
Singer: Rahul Nambiar
Lyricist: Kabilan

கேண்டீன் ஸ்பெசல் பாட்டுங்க. சொல்லிக்கிற மாதிரி இல்லே, என்னமோ பாட்டு வருது போவுது. சிசுவேசன் பாட்டு போல. கண்டிப்பா பாட்டு முடியறதுக்குள்ள கோடீஸ்வரனா ஆகிருவாரு இல்லாட்டி பெரிய போராட்டமோ பண்ணி ஜெயிப்பார் போல. படத்துல இந்தப் பாட்டு வரும் போது தம்மும் டீயும் நல்லா வியாபாரம் ஆவும்ங்கிறது நிச்சயம்.


சிறகடிக்கும் நிலவு
Singers: Karthik and Reeta
Lyrics: Snehan


ஹ்ம்ம், இந்தப் பாட்டை படத்துல பார்த்தாங்க தெரியும். ஆஹா ஓஹோ ந்னு சொல்ற மாதிரி இல்லாத மெட்டு. வர பீட்டும் பழசும், வயலினும், மொட்டை காலத்து ஸ்டைலு. ஆனா என்ன கேட்குற மாதிரி இருக்கு. பல முறை கேட்டாலும் சலிக்கலை. மணிசர்மாவுக்கு சில Template இருக்கு, அதுல இருந்து ஒரு நோட் கூட மாறலை. புதிய ஒயின், பழைய ஜாடியில, ஆனா கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு. புரியாத புதிர்.வங்க கடல் எல்லை
Singers: Naveen and Maladhi Lakshmanan
Lyricist: Kabilan


குத்து குத்து குத்து, கும்மாங் குத்து. அப்படி இப்படி இல்லே, கொக்கரக்கோ கும்மாங்குத்து. மாலதி பேரைப் பார்த்தவுடனே நினைச்சேன். கபிலன் விஜய்க்கு குத்துப்பாட்டுக்கு நல்லா பொருந்தி வர்றாரு. விஜயோட சிறப்பான இந்தப் பாட்டுலயும் இருந்தா தியேட்டருல ஆட்டம் பின்னும். ரொம்ப நாளைக்கப்புறம், தவில் வெச்சு செம குத்து. கொக்கரக்கோ கும்மாங்குத்து4 comments:

 1. நீங்க 30 நிமிசத்தில ஒரு போஸ்டயே கொப்பி அடிக்கேக்க... பாட்டு கொப்பியடிக்கிறதெல்லாம் என்ன பெரிய விசயம் பாஸ்... :)

  ReplyDelete
 2. பாஸ்.. எப்படி முடியுது ? தெலுங்கு காப்பி பாட்டைபத்தி எழுதுன பதிவையே காப்பி அடிச்சவர்னு பெருமையா இல்ல கடமையா ? http://vivasaayi.blogspot.com/2010/03/blog-post_31.html ????

  ReplyDelete
 3. வெக்கமா இல்லே? பதிவு எழுத துப்பில்லைன்னா எதுக்குய்யா பதிவு? சோறுதானே திங்கறே

  ReplyDelete
 4. @நிமல்: அட்டகாசம்!

  camouflage bg வெறயா..நடத்துங்க நடத்துங்க

  ReplyDelete