Thursday, May 20, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பல்டி- அவரின் வாக்குமூலத்தால் பரபரப்பு







ஜனநாயக தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டிருந்து நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அதிரடித் தகவல்களை வெளியிட்டார்.

"போர்க் குற்றம்" ஆதாரங்களுடன் முன்வைத்தால் விசாரிக்கவேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு

சர்வதேச நெருக்கடி குழு மற்றும் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் முன்வைப்பது போல போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருப்பதாக இடம், நேரம் உள்ளிட்ட ஆதாரங்கள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பில் விசாரணை செய்யவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

போர்க் குற்றங்கள் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் தகவல்கள் கிடைக்குமாயின் எனக்குத் தெரிந்ததை மறைக்க மாட்டேன்.

ஒழுக்கம் நிறைந்த எமது இராணுவத்தினர் சாதாரண மக்களுக்கு குறைந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யுத்தத்தை முன்னெடுத்தனர். இதனால் மூன்று இலட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டதுடன் 10 ஆயிரம் புலிகள் கைது செய்யப்பட்டனர்.

நான் இராணுவ குற்றத்தை மறைக்கவில்லை என்பதுடன் அவ்வாறான குற்றங்களை செய்தவர்கள் கடந்த காலங்களில் தண்டிக்கப்பட்டனர். சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்திற்கு வெளியே இருப்பவர்களின் கரங்களில் போர்க் குற்றம் கறை படிந்திருந்தால் அவற்றுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். படையினர் எனது உத்தரவின் கீழ் செயற்பட்டனர். சட்ட ரீதியற்ற அறிவுறுத்தல்களுக்கு அமைய படையினர் நடந்துக்கொள்வதற்கு நான் இடமளிக்கவில்லை.

எனினும் தனது அறிவுரைகளை படையினர் பின்பற்றினர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

ஓராண்டு கழிந்த போதும் இராணுவ வெற்றி மக்களின் வெற்றியாக மாற்றப்படவில்லை

ஒரு வருடத்திற்கு முன்னர் மக்கள் அனைவரும் எதிரியின் பக்கமாக திருப்பப்பட்டமையினால் மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்ப்பார்க்காமலும் கல்வி, சுகாதாரம் மற்றும் உணவு விடயங்களில் கூட கவனத்தை செலுத்தாது இருந்தனர்.

இராணுவ வெற்றிக்கு ஓராண்டு கழிந்து விட்டபோதிலும் அந்த வெற்றி மக்களின் வெற்றியாக மாற்றப்படவில்லை.

யுத்தத்தில் உயிர்களைத் தியாகம் செய்த வீரர்கள் உடலுறுப்புகளை இழந்த வீரர்களுக்கு இத்தருணத்தில் எனது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்துகின்றேன். எனினும் இராணுவ வெற்றி அர்த்தப்படுத்தப்படாமையினால் வெற்றியை கொண்டாடுவதற்கு இயற்கை கூட ஒத்துழைப்பதற்கு மறுத்து விட்டது.

நாட்டு மக்கள் கடந்த 30 வருடங்களாக அனுபவித்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் நிலையான சமாதானத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் நாடு, தேசியம் என்ற ரீதியில் கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்படுகின்றது.

நாங்கள் இராணுவ வீரர்களை மறக்கவில்லை. எனினும் இராணுவ கொண்டாட்டங்களை அனுஷ்டிப்பதற்கு கூட இயற்கை ஒத்துழைக்கவில்லை.

கொண்டாட்டம் என்று கதைக்கின்றனரே தவிர அங்கு எவ்விதமான திட்டங்களும் இல்லை என்பதுடன் இராணுவ வெற்றி மக்களின் வெற்றியாக மாற்றப்படவில்லை.

யுத்தத்திற்கு பின்னர் மக்கள் எதிர்பார்த்திருந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். நிர்வாக பிரச்சினையும் இருக்கின்றது இயற்கை ஒத்துழைக்க மறுத்தமைக்காக வருந்துகின்றேன். எனினும் அதனை எம்மால் மாற்றியமைக்க முடியாது.

யுத்த வெற்றிக்கு பின்னர் மக்களின் வெற்றியாக மாற்றுவதற்காக சரியான பாதையில் செல்லாமையை கண்டிக்கின்றோம். யுத்தம் வென்றெடுக்கப்பட்டது அதனை மக்களின் வெற்றியாக மாற்றாமல் தொடர்ச்சியாக வெற்றிதொடர்பில் கதைத்துக்கொண்டிருக்க ழூடியாது. பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதனால் கடந்த ஒரு வருடத்தில் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை காணவில்லை. மக்களின் நலன்புரி விடயங்கள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களின் எவ்விதமான அபிவிருத்தியையும் காணழூடியவில்லை.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நலன்புரி,பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் ஏனைய துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். அவற்றை நிர்வாகம் செய்வதற்கு தவறிவிட்டது.

ஒரு வருடத்திற்குள் படையினருக்கு என்ன நடந்திருக்கின்றது? படையணிகளுக்கு என்ன நடந்திருக்கின்றன? ஜெனரல் தரத்தை சேர்ந்தவர்களில் மூவர் வீட்டு அனுப்பப்பட்டுள்ளனர். பலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர். படையணிகளை சேர்ந்த பலர் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள போதிலும் சிலரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

படையினரின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சாப்பிட முடியாத நிலையில் இருக்கின்றனர். இவையெல்லாம் இராணுவத்தினரை அவமானப்படுத்தும் நடவடிக்கையாகும். படையினர் மனதளவில் பாதிக்கப்படுள்ளனர். இவ்வாறானதொரு நிலைமையினை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

விமான நிலையத்தில் ஜனாதிபதி முழந்தாளிட்டு வணங்கும் போது யுத்தம் நிறைவடையவில்லை



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழந்தாளிட்டு வணக்கம் செலுத்தும் போது இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்திருக்கவில்லை.

சீனாவினால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை காலம் தாழ்த்தி, காலம் தாழ்த்தி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதியே பயணமானேன். எனது பயணத்தை முடித்துக்கொண்டு 17 ஆம் திகதி இரவு 9 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தேன். நான் அங்கு தங்கியிருந்த காலத்தில் கொழும்புடன் தொடர்பினை ஏற்படுத்தி கொண்டே இருந்தேன் அதிகாரிகளும் என்னுடனேயே இருந்தனர்.

நான் நாட்டிற்கு திரும்பிய மறுநாள் 18 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. 19 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு புலிகள் 500 க்கு 500 மீற்றருக்குள் சுற்றிவளைத்து இறுதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்த தாக்குதலில் பிரபாகரன் உட்பட 600 புலிகள் பலியானார்கள்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியதன் பின்னர் நான் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே சென்றுக்கொண்டிருந்த போதே பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

யுத்தம் 19 ஆம் திகதியே நிறைவடைந்தது ஜனாதிபதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 16 ஆம் திகதி முழந்தாளிடும் போதும் யுத்தம் நிறைவடைந்திருக்கவில்லை என்றார்.

பிரபாகரனுக்கு உடை மாற்றியிருக்கவில்லை

இறுதிக்கட்ட யுத்தத்தில் பலியான பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அன்டனி உள்ளிட்டோரின் சடலங்களை சீருடையுடனேயே மீட்டெடுத்தோம். மரபுவழி யுத்ததில் ஈடுபடுவோரின் சடலங்களை மீட்கின்ற போது அவர்களை சீருடையுடன் காண்பிப்பதில்லை என்பதுடன் விடுதலைப்புலிகளின் பிரபாகரனுக்கு உடை மாற்றவில்லை.

பிரபாகரனின் சடலம் மீட்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்த படையினர் மட்டுமல்ல ஊடகவியலாளர்களும் புகைப்படம் எடுத்தனர் எனினும் அவருக்கு ஆடையை மாற்றவில்லை.

No comments:

Post a Comment