Friday, May 14, 2010

வடக்கின் நீதிபதிகளுக்கு முழுப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கினார் பிரதம நீதியரசர் நேற்றைய சட்டத்தரணிகளுடனான சந்திப்பின்போது




வடக்கில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு முழுப்பாதுகாப்பு உத்தரவாதமும் வழங்கு வதாக பிரதம நீதியரசர் அசோக டி சில்வா யாழ். சட்டத்தரணிகளின் சங்கத்துக்கு உத் தரவாதம் அளித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்றுப் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவை கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்து ரையாடினர்.
இச்சந்திப்புத் தொடர்பாக யாழ். சட்டத் தரணிகள் சங்கத் தலைவர் செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் உதயனுக்குத் தெரிவித்த தாவது :
பிரதம நீதியரசருடனான சந்திப்பில், சாவகச்சேரி நீதிவானுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக எடுத்துக் கூறி னோம்.
நீதிபதி ஒருவருக்கு விடுக்கப்பட் டுள்ள அச்சுறுத்தல்களுக்காக சட்டத்தரணி கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள் ளதை பிரதம நீதியரசர் வரவேற்றார்.
எதிர்காலத்தில் சாவகச்சேரி நீதிவானுக்கு அச்சுறுத்தல், இடையூறுகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. பொதுவாகவே நீதிபதிகளின் பாது காப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகை யில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரதம நீதியரசர் எம்மிடம் தெரி வித்தார்.
பிரதம நீதியரசரின் உத்தரவாதத்தை அடுத்து பணிப்புறக்கணிப்பைக் கைவிடு வது குறித்து எமது சங்க உறுப்பினர்க ளுடன் எதிர்வரும் திங்கள் அல்லது செவ் வாய் ஆராயவிருக்கிறோம். அதன்பின் வழ மையான பணியைத் தொடருவோம் என் றார்.

No comments:

Post a Comment