Sunday, May 16, 2010

காலிமுகத்திடலில் தயாராகும் வெற்றிகொண்டாட்டம்


வழமையாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வகுப்பு முடிந்தவுடன் அப்படியே
காலிமுகத்திடலில் போய் இருந்து ( அதுதாங்க கோல்பேஸ் கடற்கரை) காத்து வாங்கிட்டு அதிலேயே றால்வடை,மாங்காய் எண்டு வாங்கி சாப்பிட்டு வீட்டுக்கு வருவேன், நேற்றும் அப்படித்தான் வகுப்பு முடிஞ்சு காலிமுகத்திடலுக்கு போய் பஸ்ஸால இறங்கினேன் என்ன ஆச்சரியம் ஒரு சனத்தையும் காணோம் , கடந்த 3 நாட்களாக மழையும் கொழும்பில் பெய்து வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது, வெயிலில் வெளியே திரியலாம் ஆனால் கொட்டும் மழையில் வெளியில் திரிந்தால் ஒண்டு தடிமன் காய்ச்சல் வரும் ,இல்லாட்டி நனைஞ்சுகொண்டு போனா வீட்டில மனுசியிடமிருந்து ஏச்சுத்தான் வரும் இந்த மழையில எங்க போய் அலைஞ்ச்சிட்டு வாறீங்க, உடுப்பை தோய்ச்சுப்போட்டாலும் காயாது எண்டு.
அதனால என்னைபோல எல்லோரும் வரேல்ல போல எண்டு நினைச்சுக்கொண்டு பரவாயில்ல எவ்வளவு காலம் ஆச்சு மழையில நனைஞ்சு, பள்ளிக்கூட வயசில நனைஞ்சு சந்தோசப்பட்டிருக்கென் நண்பர்களோட, அந்தநாள் ஞாபகம் எட்டிப்பார்க்கவும் அண்மையில் வந்த பையா திரைப்பட " அடடா ம்ழைடா அடைமழடா" பாடல் ஞாபகம் வரவும் சரி கடற்கரையில் போய் நிண்டு மழைப்ய்யுற அழக ரசிச்சிட்டு போவோம் எண்டு திடலில் இறங்கினேன், அப்போ எனக்கு பின்னால் ஒரு சகோதர இன ஜோடிகளும் வந்தார்கள்,அப்பாடா துணைக்கு வந்தாச்சு எண்டு நினைத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பிச்சென்,அப்போதுதான் கடற்கரை மேடையை கவனித்தேன்.அதிர்ச்சி ,ஆச்சரியம் வேறு, அங்கே T 81 டாங்கிகள்,துருப்புக்காவிகள், பல்குழல் ஏவுகணை செலுத்தி (மல்ரிபரல்),ஆட்லறி பீரங்கிகள்,உடனடி பாலமாக மாறும் கவச வாகனங்கள்,மற்றும் இராணுவ வாகனங்களும் மழையில் நனையாமல் அரைவாசி போர்த்தப்பட்டு நின்று கொண்டிருந்தன. அப்போதுதான் எனக்கு பொறி தட்டியது நாளை கொண்டாட இருக்கு வெற்றி விழாவுக்காக இவை கொண்டுவரப்பட்டிருக்கின்றன,உடனேயே எனக்குள்ளே விபரீத எண்ணம் ஓடத்தொடங்கியது.ஆஹா எல்லாத்தையும் படம் எடுத்தால் சுப்பராக இருக்கும் எண்டு நினைத்து கொண்டு அவற்றுக்கு அருகில் போகத்தொடங்கினேன். எனது ண் 96 தொலைபேசி இருந்திருந்தால் தொலவில் இருந்திருந்தால் ஷீம் பண்ணி எடுத்திருக்கலாம் என்ன செய்ய பாவிப்பயல் அடிச்சிட்டு போய்ட்டான், இப்ப வச்சிருக்கிற சாம்சங் போன் அவ்வளவு கப்பாக்குட்டி இல்லை. சுத்திப்பார்த்தேன் அங்க மழைகாரணத்தால எல்லா பொலிஸும் ,ஆமிக்காரரும் பொயின்ருகளுக்குள்ள இருந்தாங்கள்,இதுதான் சமயம் எண்டு விரைவா நடக்கத்தொடங்கினேன்,திரும்பிபார்தேன்,அந்த ஜோடியும் எனக்குப்பின்னால வந்து கொண்டிர்ந்தார்கள், ஒருமாதிரி கொஞ்சம் கிட்ட போக பின்னாலிருந்து விசில் சத்தம் கேட்டிச்சு, திரும்பிப்பார்த்தா பொலிஸ் ஒருதன் ரெயின் கோட்டு போட்டுக்கொண்டு ஓடிவாரான், உடனேயே நானும் நல்ல பிள்ளை மாதிரி ஒண்ணுமே தெரியாத மாதிரு திரும்பி றொட்டுப்பக்கம நடக்கதொடங்கிவிட்டேன். அங்க வந்த பொலிஸ் சொன்னான் ," யண்ட பாய்" உடனேயே நானும் ஹரி சேர் மட்ட தன்நா " எண்டு சொல்லிட்டு பஸ் தரிப்பிடத்துக்கு போய்விட்டேன், ஆனாலும் எப்படியாவது ஒரு படமாச்சும் எடுக்கவேணும் எண்டு கோல்பேஸ் ஹொட்டல் பக்கமா போய் ஒரு மாதிரி அங்க நிண்ட அவசர திடீர் பாலம் அமைக்கும் அந்த கவச வாகனத்தை தெரியாமல் போட்டோ எடுத்திட்டு உடனடியாகவே பஸ் ஏறிவிட்டேன், பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் எனக்கு ஒரே வெறுப்பாக இருந்தது, தமிழன் தோற்கடிக்கப்பட்டான் என்பதை இனிமேல் ஒவ்வொருவருடமும் கொண்ட்டாடப்போகிறார்களே என்பதை நினைக்கையிலே

No comments:

Post a Comment