Wednesday, May 12, 2010

யாழ். சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பை கைவிட்டு இன்று கடமைக்குத் திரும்புகின்றனர்





சாவகச்சேரி நீதிவானுக்கு ஏற்படுத்தப் பட்ட அச்சறுத்தலைக் கண்டித்து கடந்த சில நாள்களாக நீதிமன்ற பணிப்பகிஷ் கரிப்பில் ஈடுபட்டுவந்த சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை தொடக்கம் பகிஷ் கரிப்பை கைவிட்டு கடமைக்குத் திரும்பு வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேல்நீதிமன்ற சட்டத் தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது,
கடந்த 4ஆம் திகதி கூடிய சங்கம் சாவ கச்சேரி நீதிவானுக்கு ஏற்பட்ட அச்சுறுத் தலைக் கவனத்தில்கொண்டு கண்ட னத்தை தெரிவித்ததுடன், நிலைமை சீரடைய முன்மொழியப்பட்ட நடவடிக் கைகளும் அறிவுறுத்தல்களும் செயற்படுத் தும் வரை நீதிமன்றைப் பகிஷ்கரிப்பது என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து யாழ்.மேல்நீதி மன்ற நீதிபதி இ.த.விக்னராஜாவால் கூட்டப்பட்ட கூட்டத்தில் சட்டத்தரணி கள் கலந்துகொண்டு சட்டமும் நீதி, நிர் வாகம் சீர்குலைந்து இருப்பதை அங்கு கூடியிருந்த பொலிஸ், இராணுவ,சிவில் அதிகாரிகளுக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் நிலைமையை விளக்கினர்.
அதேவேளை மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் அக்கூட் டத்தில் விளக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகளின் பாது காப்பு மற்றும் சந்தேக நபர்கள் கைது செய் யப்படுவது சரியான நடவடிக்கைகள் என்று சங்கம் ஏகமனதாக முடிவெடுக் கின்றது.
சங்கத்தின் தலைவர் முன்னாள் மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு தலைமையில் நேற்றுக்கூடிய கூட்டத்தில் நீதிமன்றக் கடமைகளுக்குத் திரும்புவது என ஏகமன தாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment