
யாழ். பிரதான வீதியில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற "கடத்தல்' நாடகத்தின் போது இளம்பெண் ஒன்றரை மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
யாழ். பிரதான வீதியில், தண்ணீர்த் தாங்கிக்குச் சமீபமாக இளம்பெண் ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார் எனக்கிடைத்த தகவலை அடுத்து யாழ். நகரத் தளபதி மேஜர் நிசந்த தலைமையில்
படையினர் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். இந்நடவடிக்கையின்போது "அந்த ஜோடி'' ஓரிடத்தில் தங்கி இருந் தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் பிரஸ்தாப பெண்ணும் இளை ஞனும் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் கடத்தல் சம்பவம் இல்லை என்றும், காதல் தொடர்பானது என்றும் தெரியவந்ததாகப் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன
No comments:
Post a Comment