Tuesday, May 25, 2010

இலங்கை ராணுவத்தினரின் கேவலமான இன்னுமொரு வீடியோ வெளியாகி உள்ளது

போரின் இறுதி நாட்களில் இலங்கை ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட போராளிகளின் உடல்ங்களை மிகவும் கேவலமாக கையாளும் ராணுவத்தினரின் வீடியோ வெளியாகி உள்ளது.பார்க்கும் போதெ நெஞ்சம் பதைபதைக்கின்றது. இறந்தவர்களையே இப்படி கையாள்பவர்கள் உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு சித்திரவதையை அனுபவித்திருப்பார்கள்.... நான் தமிழீழ பிரதேசத்திலே 2008 வரை இருந்த காலப்பகுதியில் பல தடவைகள் விடுதலைப்புலிகள் இல. ராணுவத்தினரின் உடலங்களை கைப்பற்றி அவற்றை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தார்கள், ஆனாலும் அவர்கள் இறந்து போன அந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விடயத்தில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

1 comment:

  1. 2006 ம் ஆண்டு ஜப்பசி மாதம் இலங்கை ராணுவம் முகமாலைப்பகுதியில் ஒரு முன்னேற்றத்தை மேற்கொண்டு நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டது. 100 மேற்பட்டோர் பலியாகினர். அன்றையதினம் இரவு கிளிநொச்சி மைதானத்தில் இராணுவத்தினரின் உடலங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நானும் நண்பனும் போய் பார்த்துக்கொண்டிருந்தோம் . அப்பொது மேலும் ஒரு வாகனத்தில் ஒரு தொகுதி உடலங்களை கொண்டு வந்து இறக்கினார்கள். Handle with Care என எழுதப்பட்டிருக்கும் ஒரு பெட்டியை எப்படி கையாளவார்களோ அப்படித்தான் இறந்த இராணுவத்தினரின் உடலங்களையும் வாகனத்தில் இறக்குவதில் மிகவும் கவனமாக கையாண்டார்கள். அபோது திடீரென்று ஒரு ராணுவத்தினனின் காற்சட்டைப்பையில் இருந்து ஒரு கிரனைட் கீழே விழுந்தது உடனேயே அந்த இடத்தில் கூடியிருந்தவர்கள் பலர் ஓடத்தொடங்கிவிட்டார்கள், பலர் கீழே விழுந்து படுத்துக்கொண்டார்கள்.ஆனாலும் அந்த இராணுவ வீரனது உடலத்தை தூக்கிக்கொண்டிருந்தவர்கள் மெதுவாக நிலத்தில் இறக்கிவிட்டே வெளியில் ஓடினார்கள். பின்பு அந்த கிரனைட் செயலிழக்கப்பட்ட பின்பே அனைவரும் அந்த இடத்துக்கு வருகை தந்தார்கள். இந்த ஒரு சம்பவம் போதும் வி.பு எவ்வாறு இராணுவ ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்கு....

    ReplyDelete