Monday, May 24, 2010

சாள்ஸுக்கு பிணை வழங்க முடியாது; மேல் நீதிமன்றுக்கே அந்த அதிகாரம் உண்டு கபிலநாத் கொலை வழக்கு விசாரணையில் நீதிவான் அறிவிப்பு




பாரதூரமான குற்றங்களுக்குப் பிணை அனுமதி வழங்குவதற்கான அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கே உரியதால் சந்தேக நப ரின் பிணைமனுவை மேல் நீதிமன்றத்தி லேயே சமர்ப்பிக்கவேண்டும்.
இவ்வாறு மாணவன் கபிலநாத் படு கொலை வழக்கின் சந்தேக நபரான சூசை முத்து அலெக்ஸாண்டரை (சாள்ஸ்) பிணை
யில் விடுவிக்கக்கோரி சாவகச்சேரி நீதி மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசா ரித்த நீதிவான் இப்படி அறிவித்தார்.
சாவகச்சேரியில் கபிலநாத் என்ற மாணவனைக் கடத்திப் பின்னர் கொலை செய்த சம்பவத்தில் ஈ.பி.டி.பி அமைப்பின் தென்மராட்சிப் பிரதேச அமைப்பாளரான சூசைமுத்து அலெக்ஸாண்டர் (சாள்ஸ்) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டி ருந்தார் என்பது தெரிந்ததே.
அவரைப் பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந் தது. சந்தேகநபர் சார்பில் அஜரான சட்டத் தரணி சந்திரலால் சமர்ப்பித்த இந்த மனுவை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிவான் ரி.ஜே.பிரபாகரன்
மாணவன் கபிலநாத் கொலைவழக் கில் கொலை, கொலைக்கு உடந்தை, கொலை செய்யத்திட்டமிட்டமை போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவ்வா றான பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத் தப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரைப் பிணையில் விடுவிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கே உண்டு.
எனவே சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க அனுமதிப்பது தொடர்பான மனுவை மேல் நீதிமன்றத்திலேயே சமர்ப் பிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

2 comments:

  1. கூலிப்படையும், காவலும், நீதிமான்களும்,
    வடிவேலின் பாசையில், நல்லாவே போயிட்டிருக்கே!
    ஆனா இப்பிடியே போன நல்லாவா இருக்கும்?

    ReplyDelete
  2. நல்லா சொன்னீங்க,குழந்தை இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடின கதைதான் இப்ப யாழ்ப்பாணத்தில நடக்குது.

    ReplyDelete