Monday, May 17, 2010

நீதித்துறையை அவமதித்தது தொடர்பான யாழ். மேயர் மீதான விசாரணை; அவகாசம் வழங்கியது நீதிமன்றம்





நீதிமன்றத்தை அவமதித்ததாக யாழ். நகர மேயர் திருமதி ப.யோகேஸ்வரிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்த விசாரணை பூர்த்தியாவில்லை எனப் பொலிஸார் யாழ். நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தனர்.

அதற்காக கால அவகாசத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நேற்று நீதிமன்றம் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரித்தமை தொடர்பாக யாழ். மேயரிடம் வாக்கு மூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். பொலிஸாருக்கு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேற்று இந்த விவகாரம் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட போது, மேயர் தொடர்பான விசாரணைகள் முடிவடைய வில்லை என்றும் காலஅவகாசம் தேவை என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கி, அன்று மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
இதேவேளை
நீதிமன்றத்தை அவமதித்ததாக யாழ். மாநகர ஆணையாளர், செயலாளர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விவகாரமும் நேற்று நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டன.
உள்ளூர் பத்திரிகைளின் கடந்த 15 ஆம் திகதி ஆணையாளர் வெளியிட்ட திருத்த விளம்பரத்தை ஆராய்ந்த நீதிமன்றம், ஆணையாளரையும் செயலாளரையும் இந்த விவகாரத்தில் இருந்து நேற்று விடுவித்தது.

No comments:

Post a Comment