Thursday, May 13, 2010

சாவகச்சேரியில் நேற்று 3 வயதுக் குழந்தையுடன் வானில் ஏற்றிச் செல்லப்பட்ட பெண் பரந்தனில் இருந்து தப்பி வந்தார்!





சாவகச்சேரியில் இருந்து 3 வயதுக் குழந்தையுடன் வான் ஒன்றில் ஏற்றிச்செல் லப்பட்ட பெண் சாதுரியமாகச் செயற் பட்டதால் பரந்தனில் இருந்து மீண்டு வந் துள்ளார்.
சாவகச்சேரி சிவன் கோயிலடியைச் சேர்ந்த
சந்திரசேகரம் தர்சினி(வயது 28) என்பவருக்கே இந்த நிலை ஏற்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக அப்பெண் தெரிவித்தவை வருமாறு:
நேற்று முற்பகல் 11 மணியளவில் எனது 3 வயதுக் குழந்தையுடன் சாவகச் சேரி ஆஸ்பத்திரியை நோக்கி நடந்து சென் றேன். அவ்வேளை ஆஸ்பத்திரிக்கு சமீப மாக நின்ற வானில் இருந்த நால்வர் எனது வாய்க்குள் துணியை அடைத்து விட்டு என்னையும் குழந்தையும் வானில் ஏற்றிக்கொண்டு கிளிநொச்சிப் பக்கம் சென்றனர். வாய்க்குள் துணியை அடைத் ததால் என்னால் சத்தம் போடமுடிய வில்லை.
பரந்தன் சந்தியில் வான் நிறுத்தப் பட்டு அவர்கள் தொலைபேசியில் உரை யாடிக்கொண்டிருந்தபோது, குழந்தையை வான் யன்னல் ஊடாக சாதுரியமாக வெளியே போட்டு விட்டேன். வான் புறப் பட தயாரான போது கதவு வழியே வெளியே நானும் பாய்ந்து விட்டேன். என்னை ஏற்றிச்சென்றவர்களில் மூவர் சிங்களத்திலும் ஒருவர் மட்டுமே தமிழி லும் கதைத்தனர்.
அங்கு ஆள்கள் கூடிவிட்டதால் அப்ப டியே என்னையும் பிள்ளையையும் விட்டு விட்டு வான் ஓடிவிட்டது.
ஒருவாறு எழுந்து பஸ்ஸில் குழந்தை யுடன் சாவகச்சேரி வந்தடைந்தேன் என்றார்.
குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்பட வில்லை. இரு கால்களிலும் உரசல் காயங் களுக்கு உள்ளான இந்தப் பெண் சாவகச் சேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment