Wednesday, May 19, 2010

வீடியோவை முற்றாக நிராகரிக்கிறது இலங்கை





சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட் டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது.
இது தொடர்பாகத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட் டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முழுமையாக நிரா கரிக்கின்றது.
விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கி யிருந்த பொதுமக்களை விடுவிப்பதற் கான மனிதாபிமான நடவடிக்கையிலேயே படையினர் ஈடுபட்டனர் என்பதை சான்று களுடன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந் துள்ளோம்.
இவ்வாறன மனிதாபிமான நடவடிக் கையை முன்னெடுக்கும்போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகள் பின்பற்றப்பட்டன.
பொதுமக்களுக்கு சிறிதளவு உயிரிழப் புகள் கூட ஏற்படக்கூடாது என இராணு வத்துக்கு கண்டிப்பான உத்தரவு வழங்கப் பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
லண்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் சொன்னவை
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர்தான் இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து லண்ட னில் உள்ள இலங்கைத் தூதரகத்திடம் கருத்துக் கேட்டது என்று துணைத்தூதர் அம்சா பி.பி.ஸி.தமிழோசைக்குத் தெரி வித்தார்.
இந்த ஒளிநாடாவை தங்களிடம் முன் னதாகவே பகிர்ந்துகொண்டிருந்தால் அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கருத்துக் கூறியிருக்கமுடியும். ஆனால், அப்படி யான அவகாசம் தங்களுக்கு வழங்கப்பட வில்லை என்றும் அம்சா சுட்டிக்காட்டினார்.
ஆனால் போர்க்காலத்தின் இறுதி நாள் களில் விடுதலைப் புலிகளால் பொதுமக் கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத் தப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து மக் களை விடுவிக்கவே அரசுப்படைகள் மனித நேய நடவடிக்கையை மேற்கொண்டதாக வும் அம்சா கூறினார். எனினும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களையும் விசாரிப்பதற்கு ஜனாதிபதியால் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment