Tuesday, May 25, 2010

முன்னாள் புலி போரளிகள் 198 பேர் இன்று விடுதலை







கொழும்பில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 198 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனவாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு கொழும்பில் புனர்வாழ்வு அளித்துவந்த முகாம் இன்றுடன் மூடப்படுவதாக இருந்தது. எனினும் அங்கு தங்கியிருந்த 52 பேர், தங்களது கல்வியைத் தொடரும்வரை அரசாங்கம் அவர்களைப் பொறுப்பேற்கும் எனவும் அவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

"புனர்வாழ்வு முகாமில் எனக்கு நண்பர்கள் பலர் கிடைத்தார்கள். நான் நிறைய விடயங்களை இங்கு கற்றுக் கொண்டேன். எனக்கு முகாமை விட்டுச் செல்வது ஒரு வகையில் கவலையாக இருக்கின்றது. என்றாலும் எனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது."

மூன்று வருடகாலமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 17 வயது லுக்சியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"நான் சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவை புனர்வாழ்வு முகாம் நனவாக்கியுள்ளது. நான் எனது கல்வியைக் கவனமாகத் தொடர்வேன்" என 16 வயதான கிறிஸ்டி என்ற மாணவி குறிப்பிட்டுள்ளதாக ஏ.எப்.பி., செய்தி வெளியிட்டுள்ளது. _

No comments:

Post a Comment