Thursday, May 20, 2010

யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஜூன் 16 இல் அமெரிக்கா அறிக்கை



இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற் றங்கள் குறித்து அமெரிக்காவின் யுத்தக் குற்றங்களுக்காக தூதுவர் ஸ்டீபன் ரெப் அடுத்தமாதம் 16ஆம் திகதி தனது அறிக் கையை சமர்பிக்கவுள்ளார் என "ரைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அது மேலும் குறிப் பிட்டுள்ளவை வருமாறு:
இலங்கை மீது இன்னமும் செல்வாக் குச் செலுத்தும் நிலையில் அமெரிக்கா உள்ளது.
இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா விளங்குகிறது.
மேலும் "சர்வதேச நெருக்கடிக் குழு' தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இருவரையும் விசாரிப்பதற்கான நியாயா திக்கம் அமெரிக்காவுக்கு உள்ளது.
இருவரையும் அமெரிக்க அதிகாரிகள் கடந்த வருடம் விசாரணை செய்தனர்.
எனினும், இதன்மூலம் சிறிய இரா
ஜதந்திர சர்ச்சை மாத்திரமே உருவானது.
கதை அத்துடன் முடியவில்லை
எவ்வாறயினும், இந்தக் கதை இத்துடன் முடிவடைந்துவிடவில்லை.
யுத்தக் குற்றங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை குறித்த தனது அறிக்கையை அடுத்த மாதம் 16ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.
பிரஸல்ஸைத் தளமாகக் கொண்ட சர்வதேச நெருக்கடிக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை "இலங்கையில் யுத்தக் குற்றங்கள்' என்ற அறிக்கையை வெளியிட்டது.
எனினும் எப்போதும்போல இலங்கை அரசு பிடிவாதமாக உள்ளது. அது இதுவரை சட்ட விசாரணைகளையோ, சர் வதேச தடைகளையோ எதிர்கொள்ளவில்லை.
சமீபத்திய அறிக்கைகள் காரணமாக இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை.
ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிகள் அவரது கையைப் பலப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக சர்வதேச விசாரணைகள் குறித்து அவர் அஞ்சப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment