Wednesday, May 12, 2010

கிழக்கில் மேலும் படைமுகாம்கள்


சிறீலங்கா படையினர் கிழக்கில் மேலும் இரண்டு புதிய கடற்படைமுகாமை டச் பார் மற்றும் வாகரை பிரதேசத்தில் அமைக்கவுள்ளதாகவும் இதற்கு தமது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பட்டிப்பளை பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலத்தில் இராணுவப் பயிற்சி முகாம் ஒன்றும் அடையாளம் கண்டிருப்பதாகவும் இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதுதொடர்பில் இராணுவத்தின்தரப்பில் பேசவல்ல அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கருத்து தெரிவிக்கையில் இலங்கை ஒரு தனியான நாடு எனவும் பாதுகாப்பு முகாம்களை அந்த நாட்டின் எங்கும் அமைக்க படையினருக்கு உரிமையுள்ளது எனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணம் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக படையினரின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் 1990 களில் படையினரிடம் இருந்த முகாம்களில் சில பின்னர் படையினர் இழந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இவை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்துள்ளதாகவும் காவல்துறையினரும் இராணுவத்தினரும் தனியாரின் இடங்களில் முகாம்களை அமைக்கவில்லை எனவும் பாதுகாப்பு அளிக்கவேண்டிய பகுதிகளிலேயே முகாம்கள் அமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment