Tuesday, May 18, 2010

இரசாயனக் கொள்கலன் தீப்பற்றியதால் கொழும்புத் துறைமுகத்தில் புகைமூட்டம் சுவாசிக்க முடியாமல் மக்கள் திணறல்




கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரசாயனக் கொள் கலன் ஒன்று நேற்று இரவு 8 மணியளவில் தீப்பற்றிக் கொண்டது.
துறைமுகத்தில், கொச்சிக்கடை அந் தோனியார் தேவாலயத்துக்கு பின்புறமாக உள்ள பகுதியிலேயே இந்தக் கொள்கலன் தீப்பற்றியது. உடனே அதிலிருந்து பெரும் புகை மேலெழுந்தது. சுமார் 3 மணித்தி யாலங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இந்தப் புகை வெளியேறிமையால் கொச் சிக்கடை, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகள் நேற்று முன்னிரவு முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தன.
கொச்சிக்கடை பகுதியிலுள்ள வீடுகள், கடைகள் எல்லாமே புகைமூட்டத்தில் மறைந்துபோயின. இந்தப் புகையைச் சுவாசிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் திண றினர். அந்தப் பகுதியிலிருந்து வெளி யேறி கதிரேசன் வீதி, செட்டியார் தெரு போன்ற பகுதிகளுக்குச் சென்று, புகை மூட்டம் கலைந்த பிறகே மீண்டும் மக்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை பகுதி வீதிகளில் வாகனங்கள் செல்வதும் சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது.
"கொன்ரெயினர்' ஒன்றினுள் இருந்த சிறு கொள்கலன் ஒன்றே வெடித்தது என வும், அதனைத் தொடர்ந்து அதற்குள் இருந்த ஏனைய கொள்கலன்களும் தீ பிடித்தமை யால் புகை மேலெழுந்தது எனத் தெரிவிக் கப்படுகிறது.
இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய கொன்ரெயினர்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இடத்தில் மழை வெள்ளம் சென்றமையால், கொள்கலன் ஒன்றினுள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால்தான் இர சாயனத்தாக்கம் நிகழ்ந்து இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment