Sunday, May 30, 2010

கீரிமலையில் வேள்விக்கு சிங்களப் படைகள் தடை! 2 கிலோமீற்றர் தொலைவில் வேள்வி!!!


அதியுயர் படைவலயமாக விளங்கும் யாழ் வலிகாமம் கீரிமலைப் பகுதியில் உள்ள கவுணாவத்தை ஆலயத்தில் வேள்வியை நிகழ்த்துவதற்கு சிங்களப் படையினர் தடைவிதித்துள்ள நிலையில், ஆலயத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் மக்களால் வேள்வி நிகழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கவுணாவத்தை ஆலயத்தில் வழிபாடுகளை நிகழ்த்துவதற்கு தடை விதித்திருக்கும் சிங்களப் படையினர், இன்று ஆலயத்திற்கு முதன்மைக் குருக்களையும், ஒரு சில மக்களையும் மட்டும் செல்வதற்கு அனுமதித்து, ஒரு கடாவை பலிகொடுப்பதற்கும், பொங்குவதற்கும் மட்டும் இடமளித்திருந்தனர்.

இதனால் ஏனைய மக்கள் ஆலயத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் வைத்து வேள்வியையும், பொங்கலையும் நிகழ்த்தி, நூற்றுக்கணக்கான ஆடுகளையும், கோழிகளையும் பலிகொடுத்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.


நன்றி: பதிவு

No comments:

Post a Comment