Tuesday, May 25, 2010

மகிந்தவின் ஊதுகுழலாக மாறூம் கே.பி


ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்களின் வாக்குகளை கவருவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்த பல சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து வந்து கே.பியை சந்திக்க வைத்தார் பஸில் . பின்னர் நாடாளுமன்ற தேர்தலின் போதும் கல்விமான்களையும் சந்திக்க வைத்து மகிந்தவுக்கே வாக்களிக்குமாறு கே.பி மூலமாக மகிந்த கேட்டுக்கொண்டார். பின்னர் தற்போது வடக்கில் தமிழ் உணர்வு பொங்கும் இடமாக இருக்கின்ற யாழ் பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளை சந்திக்க வைத்து புலிகள் பற்றி எதிர் விமர்சனம் பண்ணி இனிமேல் போராட்டம் எனப்து இல்லை. தமிழ்மக்களுக்கு மகிந்தான் சரியான் தலைவர் என்றும் த.தே.கூட்டமைப்பினரையும் ஓரங்கட்டுமாறும் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் எமக்கு கிடைத்த நம்பகமான தகவலின்படி கே.பி புலிகள் பற்றிய ஒரு சில தவல்களை அரசாங்கத்திடம் கொடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.ஆனாலும் கே.பியின் கைதுக்கு பிறகு உடனேயே மேற்குலகில் இருந்த வி.பு முகிய உறுபினர்கள் அனைத்து விடயங்களையும் உடனடியாகவே இரகசியமாக நகர்த்திவிட்டனர். இதனால் அரசாங்கம் இன்றும் அனைத்து வி.பு வலைப்பின்னலை பிடிக்க முடியாமல் திணறுகின்றது. ஆனாலும் இன்றும் அவருக்கு இராஜ மரியாதையுடன் தான் மகிந்த அரசு கொடுத்து வருகிறது .

இதன் ஒரு அங்கமாக இன்று பேராசிரியர் ரொஹான் குணரட்ன கே.பி பற்றிய சில பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார்.
நாட்டில் யுத்தம் நிறைவடைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து சமாதானம் நிலவுவதற்கு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவு முகவராக செயற்பட்ட, கேபி (குமரன் பத்மநாதன்) உதவத் தயாராக இருக்கிறார்

"நாடு கடந்த அரசாங்கத்தை அமைக்குமாறு வி.உருத்திரகுமாரனின் தலைமையிலான தனது குழுவினருக்குப் பணிப்புரை வழங்கி விட்டு, இலங்கை அரசிடம் சரணாகதியடைந்தவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்.

இவர் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான - காத்திரமான பாத்திரத்தை வகித்து வருவதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் ஓர் உறவுப்பாலமாக கே.பி திகழ்கின்றார். இன ஐக்கியத்திற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது தொடர்பாளர்கள் ஊடாக கே.பி. பணியாற்றுகின்றார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவர் காத்திரமான பங்கை வகித்து வருகின்றார். வடக்குக் கிழக்கை சேர்ந்த பல தமிழர்களை கே.பி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அவரை நானும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். எவ்விதமான சத்தம் சந்தடியின்றி அவரது பணி தொடர்கின்றது. அவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை. நல்லதொரு பணியில் ஈடுபடும் கே.பி அவர்களை அரசாங்கம் ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்?

No comments:

Post a Comment