 நீதித்துறையை அவமதிக்கும் வகை யில் கடந்த 11ஆம்திகதி செவ்வாயன்று உள்ளூர்ப் பத்திரிகைகளில் யாழ்.மாநகர சபையால் வெளியிடப்பட்ட விளம்பரத் துக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் நேற்று (புதன்) உள்ளூர்ப் பத்திரிகை களில் சபையினால் மீளவெளியிடப்பட்ட விளம்பரமும் மன்றுக்குத் திருப்திகரமான தாக அமையாமையினால் மீண்டும் அத னைத் திருத்தி, சரியான முறையில் பொருத்தமான முறையில் பிரசுரம் செய் யுமாறு யாழ்.நீதிமன்றம் மாநகரசபைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையை அவமதிக்கும் வகை யில் வெளியாகியிருந்த குறிப்பிட்ட விளம் பரம் தொடர்பாக நேற்று முன்தினம் யாழ். மாநகரசபை அதிகாரிகளை மன்றுக்கு அழைத்த யாழ்.நீதிமன்ற நீதிவான் இந்த விளம்பரம் தொடர்பான மறுப்பு விளம் பரம் ஒன்றை நேற்றைய (12.05.2010) பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு உத்தர விட்டிருந்தார். நீதிவானின் உத்தரவுக்கமைய நேற் றைய பத்திரிகைகளில் யாழ்.மாநகரசபை யினால் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரம் நீதிமன்றுக்குத் திருப்திகரமாக அமைய வில்லையென யாழ்.மாநகரசபை அதிகாரி களுக்கு நீதிவான் சுட்டிக்காட்டினார். எனவே சரியான பொருத்தமான விளம்பரத்தை மீண்டும் பத்திரிகைகளில் வெளியிடுமாறும், அதனைச் செய்யத் தவ றும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்.நீதிமன்றம் மாநகரசபை உயர்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
|
No comments:
Post a Comment