பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பணப் பைகளைக் கொள்ளையிட்டுவந்த பாடசாலை மாணவிகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று பிலியந்தளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சகோதரிகளான இவ்விருவரிடமிருந்து 30 பணப்பைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒன்பது மற்றும் 12ஆம் தரங்களைச் சேர்ந்த இவ்விருவரும் நீண்ட நாட்களாகவே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment