Sunday, May 23, 2010

மனிக்பாம் முகாமிற்கு செல்ல விடாது தடுத்த அரசின் எதேச்சாதிகாரத்தை கவனத்தில் கொள்க சர்வதேசமே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள்



வவுனியா "மனிக்பாம்"முகாமுக்குச் செல்லவிடாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் பன்னிருவரையும் தடுத்த இலங்கை அரசாங்கத்தின் எதேச்சாதிகாரச் செயலை, தக்கவாறு கவனத்தில் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்திடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் செயலைக் கண்டித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கூட்டறிக்கை யிலேயே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப் பதற்கு விடாது தடுத்தமை ஜனாநாயக உரிமைகளை கேவலப்படுத்தி, ஜனநாய முறைமைகளையும் உதாசீனம் செய்வதாகும் என்றும் அவர்கள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளவை வருமாறு :
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினு டைய 12 நாடாளுமன்ற உறுப்பினர்களால் வன்னியில் பொதுமக்கள் வைத்திருக்கப் பட்டிருக்கின்ற பல முகாம்களையும், தமிழ் இளைஞர்களும், யுவதிகளும், தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தடுப்பு முகாம் களையும், மீள் குடியேற்றமும் புனர்வாழ் வும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகின்ற பிரதேசங்களையும் மக்களையும் பார்வையிடுவதற்காக விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
உண்மையான நிலையை அறிந்து கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கம். இந்த விஜயம் குறித்து மாண்புமிகு ஜனா திபதிக்குக் கடிதங்கள் மூலமாக நாடாளு மன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந் தன் அவர்கள் அறிவித்து இந்த விஜயத் திற்குத் தேவையான ஒழுங்குகளைச் செய்து உதவும்படியாகக் கேட்டிருந்தார். இது சம்பந்தமாக திரு. இரா. சம்பந்தன் அவர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்களுடன் தொடர்பாடலை வைத்திருந்தார்.
அதன் பிரகாரம் இந்த விஜயம் மே 21 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து மே 22 சனி 23 ஞாயிறு தொடர இருந்தது. ஜனாதிபதி யின் செயலாளர் லலித் வீரதுங்க அவர் களுக்கு இத்தகவல் திருவாளர் சம்பந்த னால் அறிவிக்கப்பட்டு இந்த விஜயத்திற்கு அவர் தனது முற்றுமுழுதான சம்மதத் தைத் தெரிவித்தார். இதன் மூலம் இவ் விஜ யத்திற்கு மாண்புமிகு ஜனாதிபதி அவர் களின் சம்மதமும் இருந்தது என்பது தெளிவு.
இந்த நிலையில் மே 22 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர், பொதுமக்கள் வைக்கப்பட்டி ருந்த சில முகாம்களில் ஒன்றான வலயம் 4 இன் வாசலை வந்தடைந்தனர். அங்கே அதற்குப் பொறுப்பாக இருந்த பிரிகேடி யர் இந்த முகாம்களுக்குள்ளே செல்வ தற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்த விஜயத்தைத் தடுக்கும்படியாகக் கட் டளையிட்டிருக்கின்றார் என்றும் நாடாளு மன்றக் குழுவுக்குக் கூறினார்.
உடனடியாக திரு. இரா. சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியபோது வீரதுங்க இந்த விடயத்தைத் தான் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகக் கூறி, அதுவரைக்கும் நாடா ளுமன்றக் குழுவினை அங்கேயே தரித்து நிற்கும்படியும் கூறினார். அந்த முகாம் வாசலிலே சுமார் ஒரு மணிநேரம் காத் திருந்த பின்னர் ஜனாதிபதியின் செயலாள ரைத் தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற் சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந் நிலையில் திரு. இரா. சம்பந்தன் அவர் களுடன் தொடர்புகொள்ளக்கூடிய தொலை பேசி இலக்கங்களை ஜனாதிபதிச் செயல கத்திற்குக் கொடுத்துவிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் அங்கிருந்து புறப்பட்டனர். அதன் பின் னர் திரு. இரா. சம்பந்தனோடு எந்தவித மான தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை.
இந்த முகாம்களிலே தடுத்துவைக்கப் பட்டுள்ள மக்களைச் சந்திப்பதற்கு அவர் களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி களைத் தடுக்கும் இச்செயலானது அந்த மக்களுடைய நியாயபூர்வமான ஜனநாயக உரிமைகளைக் கேவலப்படுத்துகின்ற ஒரு செயலாகும். அத்தோடு முழு ஜனநாயக முறைமையையும் உதாசீனம் செய்யும் ஒரு செயலாகவும் இது அமையும். பாரிய பல விடயங்களை ஒளித்து மறைக்க விரும்பு கின்றவர்களுடைய சர்வாதிகார செயல் இது என்பது தெளிவாகிறது. இலங்கை யிலும் இலங்கையிலிருக்கின்ற எல்லா மக் களையும் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பல்வேறு அங்கங்களை உள்ளடக்கிய சர்வதேசம் முழுவதையும் கட்டுக்கடங் காத இந்த எதேச்சதிகாரச் செயலைத் தங் களுடைய முழுமையான கவனத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு நாம் வேண்டுகின் றோம்.
இந்த சர்வாதிகாரச் செயலை நாம் வன் மையாகக் கண்டிப்பதுடன் இதனை உடன டியாக நிவர்த்தி செய்வதற்குத் தக்க நட வடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கத் திடம் கோருகிறோம் என்றுள்ளது.

No comments:

Post a Comment