Saturday, May 15, 2010

அனைத்து தளபதிகளையும் ஒரே இடத்தில் தரிசனம் கொடுத்த அந்த நாள்- பாகம் 1




அன்று காலை வெகு சீக்கிரமே எழும்பவேண்டிய கட்டாயம்,பின் வீட்டு அன்ரியும் பிள்ளைகளும் அல்லோலகல்லோலப்படும் சத்தம் என் நித்திரை முறிய காரணமாகியது.அனைவரும் தமது வீட்டில் இருந்த பங்கருக்குள் ஓடி பதுக்கிக்கொள்வதில் குறியாக இருந்தனர். எனக்கோ இது ஒன்றும் புதிதல்ல.2007 ம் ஆண்டுக்குபிறகு இது வன்னி மக்களின் ஒரு சராசரி வேலையாகிபோய்விட்டது.

ஆனாலும் நமது புலனாய்வு அறிவைப்பயன்படுத்தி நாமும் பதுங்க வேண்டுமா இல்லை எங்கே போடப்போகிறது எண்டு வீட்டு கூட்ஸ்க்கு மேல ஏறி நிண்டு

பார்க்கலாமா எண்டு வண்டு சுத்திற இடத்தையும் நேரத்தையும் கணித்து தெரிந்து கொள்வோம்.வண்டு எனபது அமெரிக்கவின் புண்ணியத்தினால் இலங்கை ராணுவத்துக்கு வழங்கப்பட்ட உளவு விமானம்,இதை வன்னியில் உள்ள

அனைவரும் இப்படித்தான் அழைப்போம். இந்த வண்டு மிகவும் உயரத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும்,அதனால் எமது கண்களால் சாதாரணமாக

பார்த்துவிட முடியாது. உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே கண்டு பிடிக்கமுடியும்.அதனால் அதை சத்தத்தை வைத்தே அந்த விமானம் எந்த பிரதேசத்தை வட்டமிடுகிறது என்று தெரிந்து கொள்வோம்.அதனால் தான் மக்கள்ஸ் அதுக்கு வண்டு என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

வண்டு ஒரு பிரதேசத்தை வட்டமிடத்தொடங்கிவிட்டால் அந்த பிரதேசத்தில் உள்ள மக்கள்ஸ் வேகமாக அந்த பிரதேசத்தில் இருந்து வேறு இடங்களுக்கு சென்றுவிடுவார்கள் இல்லையென்றால் பங்கருக்குள் பதுங்கிக்கொள்வார்கள்.அத்துடன் அருகில் ஏதாவ்து இயக்க முகாம் இருந்தால் மிக தூரமாகபோய்விடுவார்கள். நான் இருந்த வீட்டில் மொத்தமாக 7 பேர் தங்கியிருந்தோம்.அனைவருக்குமாக எமது நிறுவனத்தினால் அந்த வீடு கொடுக்கப்பட்டிருந்தது.அன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் பங்கர் வெட்டி வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாய தேவையாக இருந்து.

எனவே நாமும் எமது வீட்டில் ,பங்கர் சகல வசதிகளுடன் வெட்டி வைத்திருந்தோம், அதனால பக்கத்தில் இருக்கும் அன்ரிமார்,சிறுவர்கள்,சிறுமிகள்

எங்கள் வீட்டு பங்கரில் பதுங்கிக்கொள்வார்கள்.எனக்கொரு கெட்ட பழக்கங்க. இப்படியான நேரத்தில் கமராவும் கையுமா அலைவேன் ,கிபிர் வந்து குண்டு போடும் போது, வீடியோ எடுப்பேன் அது அருகிலே என்றாலும் கூட.( நான் 2008 ஜன்வரி மாதம் உருத்திரபுரம் முகாம் மீது சரமாரியா 3 கிபிர் விமானங்கள் குண்டு மழை பொழிந்த்தன

அப்போது ஒரு விமானம் எமது நிறுவனத்துக்கு 500 மீட்டர் தள்ளி உள்ள இயக்கத்தின் மருத்துவ பிரிவு முகாமுக்கு குண்டு போட்டது ,அதனை நான் நிலத்தில் பாதுகாப்பாக படுத்து இருந்து வீடியோ எடுத்திருந்தேன்,அன்று புலிகளின் விமானஎதிர்ப்புப்படையினர் மிகவும் மூர்க்கமாக கலிபர் ,23 m.m மற்றும் ஒலிகன் பீரங்கிகளினால் கிளீநொச்சி நகரின் நாலாபுறமுமிருந்து கிபிர் விமானங்கள் மீது தாக்கினார்கள்,இதன் காரணத்தினால் அவையினால் சரியான இலக்குகளைத்தாக்க முடியாமல் வெறும் காணிகளில் போட்டுவிட்டு தளம் திரும்பின.அவை அனைத்தும் எனது வீடியோவில் பதிவாகியிருந்தது. பின்னர் அவை இணையத்தள்ம் ஊடாக வெளீயாகி இன்றும் உலகெங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றது) எனவே அந்த வீடியோ மூலம் நான் கிளியில் சிறிது பிரபலம் அடைந்திருந்தேன்,முக்கியாமான் அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்ததற்காக முக்கியமானவர்களிடம்இருந்து பாரட்டும் கிடைத்திருந்து.

அந்த விமானக்காட்சியைப்பார்க்க இங்கே அழுத்துங்கள்

எனவே எனக்கு இப்படிப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்வது மிகவும் பிடித்திருந்தது,அத்துடன் இதனை சவாலாகவே கருதினேன்.

எனெவே 2 ம் திகதி கார்த்திகை மாசம் 2007 காலை 6 மணியிருக்கும் எமது பிரதேசம் உள்ளடங்கலாக அதிகாலை முதல் வண்டு சுற்றிக்கொண்டிருந்தது.

முதல் நாள்தான் தலைவர் அவர்களினால் அநுராதபுரம் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்புலிகளுக்கும்,வேவுப்போராளிகளுக்கும் விருது வழங்கியிருந்தார்.

எமது வீட்டுக்கருகில் இருந்த படைத்துறைப்புலனாய்வு முகாமுக்குள் மணி ஒலிக்கப்பட்டது( வன்னியில் இருந்த அனைத்து இயக்க முகாம்களிலிலும்

கிபிர் விமானம் கட்டுநாயக்காவிலிருந்து புறப்படும்பொழுதே இங்கே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு மணி ஒலிக்கப்படும்,மணி ஒலித்த உடனேயே அனைத்து போராளிகளும் பங்கருக்குள் போய்விடுவார்கள் என்பது இராணுவத்துக்கு 2008 வரை தெரியாது) கிபிர் விமானம் வந்து பல நிமிடங்களின்பின் தான் அதன் சத்த்தை எங்களால் கேட்க முடியும்.எனவே நானும் எம்து வீட்டிலிருந்த எமத் சக ஊழியர்களூம் வீட்டுக்கு வெளியில் வந்து நின்று ஆகாயத்தை பார்த்துகொண்டிருந்தோம்.

திடிரென்று விமானத்தின் சத்தம் கேட்கத்தொடங்கியது. அப்போ அந்த திசையைநோக்கி நான் பார்த்த போது கிளீநொச்சை ஆஸ்பத்திரி பக்கமாக மிகவும் தாழவாக பதிந்து குண்டுகளை போட்டு விட்டு மேலெழுந்து.அன்றையதினம் நான் எனது கமராவை அலுவலகத்தில் வைத்து விட்டு வந்ததினால் என்னால் ஒளிப்பதிவு செய்யமுடியாமல் போய்விட்டது.அதே இடத்தில் சரியாக 1 வருடத்தின் முன்பு 2006 ம் ஆண்டு 2 ம் திகதியும் குண்டு போட்டன கிபிர் விமானங்கள் ,ஆனால் கிளிநொச்சி மருத்துவமனைக்குத்தான் சேதம் அதிகமாக இருந்தது அத்துடன் 2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ம் திகதி முகமாலையில் சண்டை தொடங்கிய பிறகு அதுதான் முதல்முறையாக கிளிநொச்சி நகருக்குள் கிபிர் விமானங்கள் மிகவும் தாழ்வாக பதிந்து குண்டுகள் போட்டன.அன்று எமது சக அலுவலர் சுதர்சினியின் பிறந்தநாள்,எனவே பின்னேரம் அனைவரும் கேக் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதுதான் எமது நிறுவனத்தின் விமான அபாய மணி ஒலித்தது, எனவே அனைவரும் பங்கருக்கு சென்றவேளையில் நானும் நண்பன் சுதனும் எனது அலுவலக அறையில் இருந்து கதைக்க்துகொண்டிருந்தோம்,அது நாள்வரை கிபிர்விமானங்கள் காடுகளுக்குள் மட்டும் தான் கொண்டு போட்டுக்கொண்டிருந்தன.அந்த அலட்சியத்தால் நாமிருவரும் வெளியில் போகவில்லை.அப்போதுதான் கீழிருந்து கலிபர் துப்பாக்கிகள் சுடும் ஓசைகள் கேட்டன. நானும் அவனும் அதைக்கேட்டு விட்டு வெளியில் போய்ப்பார்ப்போம் என்று வெளியில் வந்துகொண்டிருக்கும் வேளை மிகவும் பலத்த சத்தத்துடன் கிபிர் விமானம் பதிந்து கீழே போய்க்கொண்டிருந்தது, அந்த நேரம் உடனே நான் கீழே விழுந்து படுத்துவிட்டுத்தான் பார்த்தேன் பக்கத்தில் நின்ற சுதனைக்காணவில்லை.அவன் சத்தம் கேட்ட உடனேயே தவண்டு கொண்டு பங்கருக்குள் போய் விழுந்த்துவிட்டான்,மிகப்பெரிய சத்ததுடன் குண்டுகள் வெடித்தன ,எமது அலுவலகம் அதிர்ந்தது, சில யன்னல் கண்ணாடிகள் உடைந்தன, மாமரத்துக்குப்பக்கத்தில் சில

குண்டு சிதறல்கள் வந்து விழுந்தன.சில ந்மிடத்தில் விமானங்களும் போய்விட்டன.அந்தநாளை எம்மால் மறகமுடியாமல் போய்விட்டது,அத்துடன் சுதர்சினியின் பிறந்தநாளும் எல்லோராலும் மறக்கமுடியாது போய்விட்டது

மீண்டும் அதே நாளில் சரியாக ஒருவருடம் களித்து குண்டு போட்டு விட்டு போனார்கள் இல.விமானப்படையினர்.சிலநிமிடங்களில் அனைத்து மக்கள்ஸ் ம் சுமூக நிலைமைக்குத்திரும்பிவிட்டார்கள் நாங்களும் எங்க போட்டிருப்பான் எண்டு எமக்குள்ளெ ஒரு பில்டப்பை போட்டுக்கொண்டு காலை கடன்களை முடித்துக்கொண்டு அலுவலகம் போனோம் அலுவலகத்தின் வாசலில் காய நின்று அழுது கொண்டு நின்றார் ,என்னவென்று கேட்ட போது காலைல குண்டு போட்ட போது அவ்வோட புருசன் அந்த் இடத்தில் தான் இருந்தவராம் அதனால அங்கே பார்க்கப்போன போது இயக்கம் அந்த லேனுக்குள்ள போக விடலயாம், தன்னோட புருசனுக்கு என்ன ஆச்சோ எண்டு சொல்லி அழுது கொண்டிருந்தா, நாங்களும் அவவை சமாதானப்படுத்தி உள்ளே கூட்டி வந்து உட்காரவைத்து தன்நம்பிக்கை ஊட்டினோம் அவருக்கு ஒண்டும் நடந்திருக்கது எண்டு. பின் ஒரு சில மணி நேரத்தில் அவரும் ஒரு மாதிரி சிறு காயங்களோடு ஆஸ்பத்திரியில் மருந்து கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார்.பங்கருக்குள் ஓடிப்போய் பதுங்கியதால் தான் தப்பியதாகக்கூறினார்,அடுத்த நிமிடமே எமது புலனாய்வு வேலையைத்தொடங்கினோம்,எங்க குண்டு விழுந்த்து ஏதாவது இயக்கத்துக்கு சேதமோ எண்டு விசாரித்தோம் அப்போ அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.ஒரு வாகனம் அங்கே நிக்கிறது அதுக்குகிட்டே யாரும் போகேலாம இருக்கு,ஒரே பாதுகாப்பு போட்டிருக்கு,குண்டு விழுந்தது இயக்கத்தோட ஒர் பழைய காம்,ஆனா யாரோ உள்ளுக்குள்ள இருந்திருக்கினம் போல எண்டு சொன்னார்,ஆனால் அவர் வெளில நிக்கிது எண்டு சொன்ன வாகனம்

வேறு யாரோடதுமில்ல புலனாய்வுபொறுப்பாளர் பொட்டு அவர்களோடது எண்டதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்திச்சி. அண்டைக்கு அதிகாலையிலதான் தலைவரோட அனைத்து முக்கியதளபதிகளூம் ஒப்பரேசன் எல்லாளன் வெற்றிகொண்டாத்தில் பங்கு பற்றியிருந்தார்கள்.காலையில் பேப்பரில் கூட படத்தோட நியூஸ் வந்திருந்த்து.

அப்போ அவரோட வாகன அந்த ஏரியாவில் நிக்குது எண்டால் மிகமுக்கியமான இடமாத்தான் இருக்கும் எண்டு நினைத்துக்கொண்டே எனது அலுவலக வேலையை செய்யத்தொடங்கினேன் .அப்போ இணையளத்தள செய்திகளைப்பார்த்தேன், விமானக்குண்டு வீச்சு பற்றி ஏதாவது போட்டிருக்கா எண்டு, அதில் திருவையாறு பகுதியில் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சு எண்டே போட்டிருந்து. 9 மணீபோல எமது சக அலுவலக அதிகாரி ஓடி வந்து சொன்ன செய்தி என்னை ஒருகணம்

ஆடிப்போக வைத்தது.பரிசளிப்பு விழா முடிஞ்சு தமிழ்ச்செல்வன் காலைல அந்த வீட்டிலதான் வந்து நிண்டவராம். கிபிர் வெளிகிட்ட அலாரம் அடிச்ச உடனே எல்லாரும்

பங்கருக்குள்ள போய்ட்டினாம்.அந்த பங்கரைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த சம்பவம் நடந்து பல காலத்துக்குப்பிறகு எனக்கு அந்த இடத்துக்குபோக கிடைத்தது

ஒரு கிணறு மாதிரி சீமெந்து கற்களினால் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டு அதற்கு வெளியே மண்மூட்டைகள் அடுக்கப்பட்டு,பின் மீண்டும் சீமெந்து கற்களினால் கட்டப்பட்டு பெரும் கற்பாறைகள் போடப்பட்டிருந்து.வெளியே செல்வதற்கு வாசல் ஒன்றும் இருந்தது. இதை ஏன்சொல்கிறேன் என்றால், எந்த ஒரு குண்டு வெடிப்புக்கும் தாக்குபிடிக்கக்கூடிய அளவில் அந்த பங்கர் கட்டப்பட்டிருந்து.

சரி இனி சம்பவத்துக்கு வருவோம்.

அதிகாலையில் இருந்தே வண்டு கிளிநொச்சி நகரை சுற்றி கொண்டிருந்திருக்கிறது.அப்போதுதான் பரிசளிப்பு விழா முடிந்த்து தமிழ்ச்செல்வன் அவர்கள் தனது பஜிரோவில் இந்த முகாமுக்கு அதிகாலை வேளை வந்து தங்கியிருக்கிறார். அதனை வண்டு மூலமாக வீடியோ பண்ணிய ராணுவத்தினர் அந்த இடத்தை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்திருக்கின்றனர். அக்கிருந்து அநத வாகனம் வெளியே வராமையினால் யாரோ இயக்க பிரமுகர் உள்ளே இருக்கின்றார் என தெரிந்த்து கொண்டு விமானப்படைக்கு அறீவித்திருக்கின்றனர். உடனேயே வண்டு மூலம் அந்த வீட்டின் சரியான G.P.S பெற்றுக்கொண்டு கிபிர் விமாங்கள் குண்டுகளைப்போட்டிருக்கின்னறன.கிபிர் விமானங்களும் வந்த உடனேயே தமிழ்ச்செல்வனும் அவர்களின் உதவியாளர்களும் பங்கருக்குள் போய் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.ஆனால் விதி அந்த குண்டுகளும் சரியாகப்போய் அந்த பங்கரின் வாசலிலேயெ வெடித்திருக்கின்றன,ஒன்றோ இரண்டோ இல்லை 5 குண்டுகள். வாசலில் வெடித்த குண்டுகள் அந்த பங்கரினுள்ளே மிகபெரிய தாக்கத்தி ஏற்படுத்தி உள்ளே உடைத்துவிட்டன, அதில் சிக்கி பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், லெப்.கேணல் மற்றும் அவரது உதவியாளர்களும் வீரமரணம் அடைந்தனர்

ஆனால் வெளியில் நின்று கீழே விழுந்து படுத்த போராளிகளும்,அடுத்த வளவில் பதுப்க்கிய போராளிகளும் சிறிய காயங்களோடுதப்பிவிட்டனர்.

விடயம் திஎரிந்த உடனேயே, திரு பொட்டம்மான் அந்த இடத்துக்கு வந்து தமிழ்ச்செல்வன் அவர்களை கூப்பிட்டுகிட்டே இருந்த்தாராம், உடனடியாக அந்த இடத்துக்கு இடிபாடுகளை அகற்றி பங்கரினுள்ளே சிக்கியிருந்த்தவர்களை காப்பாற்ற மிகவும் சிரமப்பட்டார்கள் போராளிகள், ஆனால் விதி அவர்களை எம்மிடம் இருந்து பிரித்து விட்டது. தமிழ்ச்செல்வனின் உடலம் மீட்கப்பட்ட போது அவரின் கால்கள் முறிந்தே கிடந்தன, மற்றவரின் உடலம் மிகவும் மோசமாக சிதைவடைந்து விட்டது.

எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. எதிரிக்கு மூக்குடைத்து வெற்றிவிழா கொண்டாடிய அந்த நாளே எமது மிகப்பெரிய இழப்பைக்கொடுக்கவேண்டியதாயிற்று. இந்த செய்தியை தலவரிடம் பொட்டு அம்மானே நேரிடியாக தெரிவிக்க ஒருகணம் அவரும் கலங்கிப்போனாரம்.தவிர்க்கமுடியாத பேரிழப்பு.

சில மணீ நேரத்தில் இணையத்தளத்திலும் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் வீரமரணம் தெரிவிக்கப்பட்டது.அதையடுத்த 2 நாட்கள் துக்கதினமாக அறிவிக்கப்பட்டது.

எனவே நாமும் அலுவலக வேலைய முடித்துக்கொண்டு பின்னேரம் வீடு போய்க்கொண்டிருந்தோம். அப்போ எமது வீதியில் எனக்கு சில விடயங்கள் புதிதாகப்பட்டது. சில வீடுகளில் பல இளைஞ்ர்கள் நின்று கொண்டிருந்தார்கள்,அதைத்தவிர புதிய ரக மோட்டார்சைக்கிள்களில் சீருடை அணிந்த போராளிகள் கைகளில் கனரக ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.எமது வீட்டுக்கு வரும்போது வாசலில் நிண்ட அன்ரி சொன்னா தமிழ்ச்செல்வனோட பொடி வந்திருக்காம் போய்ப்பார்க்கேல்லையோ எண்டு

உடனே நானும் ஞானாவும் வெளிக்கிட்டு நமது வீட்டுகருகில் இருந்த தமிழ்ச்செல்வனின் வீட்டுக்குப்போனாம்,அபோது அந்த ஒழுங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த்து நானும் பார்த்துக்கொண்டே போகும்போது திடீரென்று மோட்டர்சைக்கிளில் உள்ளே இருந்து வந்த் போராளைகள் எங்களை வீதியின் வெளீயே நிக்குமாறூ கேட்டார்கள், அப்போ து திடீரென்று எங்கிருந்தோ இரண்டு பஜிரோக்கள் வந்து தமிழ்ச்செல்வனின் வாசலில் நின்றன., இருட்டு வேறு,அனைத்து வாகன லைட்டுக்களும் நிப்பாட்டப்பட்டன, அப்போது வீட்டுக்குளேயிருந்து

நாலைந்து போராளிகள் சுற்றிவர ஒருவர் உள்ளிருந்து வந்து பஜிரோவில் ஏறினார்.அப்போ ஞானா கத்தினான் அண்ணே தலைவர் போறார் எண்டு, அந்த ஒரு கணத்தில் நான் அவரை பார்க்கும் பேறு பெற்றேன்.உடனேயே சீறிகொண்டு புறப்பட்டது அவரின் பஜிரோ, எம்மை கடந்து செல்லும் போது எனக்குள்ளே எண்ணிக்கொண்டேன்,சீ கொஞ்ச நேரம் முதல்ல வந்திருந்தாகூட அவரைப்பார்த்திருக்கலாமே எண்டு, என்ன செய்ய கொடுத்து வைத்தது அவ்வளவுதான் எண்டு நினைத்துக்கொண்டு எனது அஞ்சலியைச்செலுத்தி விட்டு வீடுவந்தேன்.


தளபதிகளின் அபூர்வ படங்களுடன் மிகுதி சம்பவம் தொடரும்...

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. விமானத்தாக்குதல் காட்சி நீக்கப்பட்டுள்ளது, ஏனென்பது கொலைக்களம் வீடியோபார்த்தவர்களுக்கு புரியும் மேலதிகமாக சொல்லத்தேவையில்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. கருப்பு பின்புலத்தை மாற்றுங்கோ.

    ReplyDelete