Thursday, May 20, 2010

தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினரை பார்வையிட அனுமதி கோருகிறது ஐ.சி.ஆர்.சி

வவுனியாவில் விடுதலைப் புலி உறுப் பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புனர்வாழ்வு முகாம்களுக்குச் செல்வதற் கான அனுமதியை வழங்குமாறு செஞ் சிலுவை சர்வதேசக்குழு இலங்கை அர சைக் கோரியுள்ளது.

கொழும்பு, மே 21
வவுனியாவில் விடுதலைப் புலி உறுப் பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புனர்வாழ்வு முகாம்களுக்குச் செல்வதற் கான அனுமதியை வழங்குமாறு செஞ் சிலுவை சர்வதேசக்குழு இலங்கை அர சைக் கோரியுள்ளது.
செஞ்சிலுவை சர்வதேசக் குழுவின் தலைவர் ஜகோப் கெலென் பேர்ஹர் பி.பி.ஸிக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இதுபற்றி மேலும் குறிப்பிட்டுள் ளவை வருமாறு:
செஞ்சிலுவை சர்வதேசக் குழு இலங்கை அரசிடம் இரு வேண்டுகோள் களை விடுத்துள்ளது.
புனர்வாழ்வு முகாம்களுக்குச் செல்வதற்கும் மக்கள் மீள்குடியேற்றப்படும் பகுதிகளில் பிரசன்னமாகியிருப்பதற்கும் அனுமதி வழங்கவேண்டுமென்பதே அந்த வேண்டுகோள்கள்.
மோதலின் இறுதிக் கட்டத்தில் அப்பகுதிகளில் செயற்படுவதற்கு எமக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.
வடபகுதியில் மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவும் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு எமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment