Thursday, May 13, 2010

காணாமற் போனோரின் உறவினர்கள் வவுனியாவில் 18ஆம் திகதி ஆர்ப்பாட்டம்





யுத்த வெற்றியின் ஓராண்டு நிறைவை அரசு கொழும்பில் கொண்டாடும் தினத் தில் காணாமற் போனவர்கள் மற்றும் சிறைக் கைதிகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்குமுகமாக "காணாமற் போனோரைத் தேடியறியும் குழு' வவுனியா பஸ் நிலை யம் முன்பாக மறியல் போராட்டம் ஒன்றை நடத்துகின்றது.
இது தொடர்பாக அந்தக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளவை வருமாறு:
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணா மற் போயுள்ள நிலையில் நாம் இதை அரசுக்கு எடுத்துக் காட்டியும் இதுவரை எமது அமைப்புக்கு எத்தகைய பதிலையும் அரசு வழங்கவில்லை. யுத்தத்தின் பாதிப்பால் மக்கள் எதிர்காலத்தில் நம்பிக்கையை இழந்த நிலையில் துன்பச் சுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள். ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறையில் எதுவித நீதி விசாரணையும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் முடக் கப்பட்டுள்ளனர். வெளியேறிய இரண்டு
லட்சம் மக்கள் எதுவித உதவிகளும் இன்றி பரிதவிக்கின்றனர். இத்தகைய துயரமான நிலையில் அரசு யுத்த வெற்றியின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடிவருகின்றது.
இத்தகைய சூழ்நிலையில் காணாமற் போனவர்கள் தொடர்பாகவும், சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் அரசின் கவனத்தை ஈர்க்க எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வவுனியா மாநகரில் பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக மறியல் போராட்டம் ஒன்றை நடத்தத் திர்மானித்துள்ளோம்.
எனவே காணாமற் பேனவர்களின் உறவினர்களும், சிறைக் கைதிகளின் உறவினர்களும் இப் போராட்டத்தில் கலந்துகொண்டு தமது உறவுகளை மீட்டெடுக்க எம்மோடு கைகோத்து செயற்படும்படி வேண்டுகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment