
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி, ஒரு பொலிஸ் அதிகாரியும் இரு பொலிஸ் கான்ஸ்டாபிள்களும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
மேற்படி நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி நபர் கடந்த 24ஆம் திகதி திடீரென உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறித்த நபரின் உறவினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
தனது பதிவை உறுதிப்படுத்தத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment