Sunday, May 30, 2010

கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்தோர் 50 ஆயிரம் ரூபா நிவாரணம் பெறுவதற்கு காணி உறுதிகள் கிடைக்க மாற்று ஏற்பாடுகள்



கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடிய மர்ந்த மக்களில் காணி உறுதி இல்லாத வர்கள் 50 ஆயிரம் ரூபா நிவாரணத்தைப் பெறுவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
வன்னிக்குக் கடந்தவாரம் மேற்கொண்ட விஜயத்தின்போது, அங்குள்ள மக்கள் தமது காணிகளின் உறுதிகளைப் பெறமுடி யாதுள்ளது என்றும் அதன் காரணமாக 50 ஆயிரம் ரூபா நிவாரணத்தையும் இழக்கும் நிலை உள்ளதாகவும் கவலை வெளியிட்டனர்
இது தொடர்பாக பிரதிப் பதிவாளர் நாய கம் என்.சதாசிவஐயரிடம் முறையிட்ட போது, உறுதிகளைப் பெறுவதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் நாடாளு மன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டப் பதிவகத்தில் இருந்த காணி உறுதிகள் காணாமற்போய் விட்டன. இதன் காரணமாகத் தற்காலிக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணிச் சொந்தக்காரர் தம்மிடம் உள்ள உறுதிகளின் பிரதிகளை மீளப்பதிவு செய்ய ஏற்பாடு அத்துடன் கிளிநொச்சிக் காணிகளின் பதிவுகள் பெரும்பாலானவை வவுனியா, யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய காணிப்பதிவகங்களில் மேற்கொள்ளப்பட் டன. அந்தப் பிரதேச நொத்தாரிசுகள் இந் தப்பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களுடன் தொடர்புகொண்டு, உறுதி களின் பிரதிகளைப் பெற்று கிளிநொச்சி காணிப்பதிவகத்தில் பதிவு செய்து உறுதி களைப் பெறமுடியும்.
புதிய உறுதிகளைப் பதிவு செய்யக் கிளிநொச்சி பதிவகத்துக்கு அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டுள்ளன. காணி உரிமை யாளர்கள் அந்தப்பதிவகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிகளைப் பெறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
அரச காணிகளைப் பொறுத்தவரை, மாகாண காணி ஆணையாளருடன் தொடர்பு கொண்டு காணிகள் தொடர்பான முடிவு களை எடுக்க வேண்டும் என்று பிரதிப்பதி வாளர் நாயகம் தெரிவித்தார் என நாடாளு மன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரி வித்தார்.

No comments:

Post a Comment