Wednesday, May 19, 2010

வன்னியின் இறுதி நாளில் மறக்க முடியாத அனுபவம்




2008 ம் ஆண்டு புரட்டாசி மாதம் வன்னியில் போர் மும்முரம் அடைந்ததிருந்தநிலையில் இலங்கை அரசாங்கம் அனைத்து அரச சார்பற்ற நிறுவன அனைத்து ஊழியர்களையும் வன்னியை விட்டு வெளியேறுமாறு
பணித்திருந்தது. இதை ஏற்கனவே அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் எதிர்பார்த்திருந்தன. அதனால் மாசி மாதம் 2008 ல் அரச சார்பற்ற நிறுவனங்களும் இதைப்பற்றி கூடி ஆராய்ந்து இவ்வாறான கட்டளையை அரசாங்கம் அறிவித்தால் அதனை எப்படி எதிர்கொள்வது,எப்படி நிறைவேற்றுவது என்று பல ஒத்திகை எல்லாம் பார்க்கப்பட்டிருந்தன. அதன்படி அனைத்து நிறுவனக்களும் தமது வெளிமாவட்ட ஊழியர்களையும் ,வாகனங்களையும்,ஒருதொகுதி அலுவலக பாவனைப்பொருட்களிஅயும் எடுத்துக்கொண்டு ஜ.நா தலைமையிலான வாகன தொடருடன் செல்வது எனத்தீர்மானித்திருந்து.
அதன்படி 12 புரட்டாசி மாதம் 2008 ல் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் விடுதலைபுலிகளிடம் அனுமதி பெற்றுகொண்டு வெளியேறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்கள்.
நாமும் எமது உறவினர்களிடமும், அயலவர்களிடமும் கண்ணீர்மல்க விடைபெற்றுக்கொண்டு வெளியேறதயாராக இருந்தோம்.
அன்று எம்முடன் எனது நண்பனும் சக ஊழியருமான சுதனும் எம்முடன் வரத்தயாரக இருந்தான். வன்னியை இருப்பிடமாக கொண்ட யாருக்கும் வன்னியை விட்டு வெளியே செல்ல அனுமதிகிடைக்கவில்லை. ஆனாலும் இவனுக்கு கிடைத்திருந்தது எமக்கு ஆச்சரியத்தையும் சந்தோசத்தையும் கொடுத்திருந்தது. காலையில் எல்லோரும் வாகனத்தில் ஏறி ஜ.நா தலைமை அலுவலக வாசலில் காத்திருந்தோம் . எம்முடன் வன்னியில் இருந்த அனைத்து அரச சார்பற்ற நிறுவன ஊழியர்களும் வந்திருந்தார்கள் அவர்களுடைய வாகனங்களில்.சிறிது நேரத்தில் கிளிநொச்சிப்பக்கமாக இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து ஜ.நா தலைமை அலுவலக வாசலில் ஒன்றுகூடிவிட்டார்கள். ஜ.நா அதிகாரிகளையும்,அரச சார்பற்ற நிறுவனங்களையும் வன்னியை விட்டு வெளியேறவேண்டாம் என கோசமிட்டவாறே வீதிக்கு குறுக்காக அமர்ந்து விட்டார்கள்.எனவே நாம் எமது பயணத்தை தொடர முடியாமல் போனது. அப்போது "போகாதே போகாதே வன்னியை விட்டு போகதே" என்ற ஆவேசக்குரல் எம்மை ஒருகணம் திகிலடையச்செய்தது. ஏனெனில் அந்தக்குரல் எமக்கு பழக்கப்பட்ட குரலாக இருந்த்து. உடனே அந்த குரல் வந்த இடத்தை நோக்கிப்பார்த்தால் ஒரே அதிர்ச்சி,ஆச்சரியம், அதைவிட சிரிப்பு வேறு.அவ்வாறு கோசமிட்டுக்கொண்டிருந்தவர் வேறு யாருமில்ல கஸ்டப்பட்டு அனுமதி எடுத்து போகும்போது ஆராத்தி எடுக்காத குறையாக வழியனுப்பி வைத்த சுதனின் தந்தைதான். உடனேயே சுதனைத்தட்டி மச்சான் அங்க பார் கொப்பர் குடுத்த காசுக்கு எப்பிடி கூவுறார் பார் என்று காட்டி நாங்கள் நக்கலடிக்கத்தொடங்கிவிட்டோம். அப்போ ரவி சொன்னான் டேய் சுதன் உனக்கு விதி அப்பரோட உருத்தில வெப்பனாப் பாயுது. பாரேன் நீ அவரை விட்டு போறதை தாங்க முடியாமல் வந்து போராட்டம் நடத்துறார் எண்டு டிரைவர் ராம் நக்கலடிக்கத்தொடங்க சுதனால் என்ன செய்வது எண்டே தெரியல.பிறகு அனைத்து மக்களும் ஜ.நா பிரதிநிதிகளுடன் தமது நியாயா கோரிக்கைகளை முன்வத்தார்கள். அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை எனவே அன்று அந்த பயணம் கைவிடப்பட்டது. நாங்கள் அனைவரும் வீட்டுக்கு வந்து வந்துவிட்டோம். மத்தியானம் அனைவரும் சாப்பிடவில்லை என்பதால் சாப்பிடப்போவோம் என்று நினைக்கையில் சுதன் கையில் பாசலுடன் வந்தான் என்ன மச்சான் பார்சல் எண்டவுடன், மச்சான் அம்மா காலையில் சோறும் ஆட்டிறச்சி கறியும் பார்சல் கட்டி தந்துவிட்டவா இனி எப்ப நாங்கள் உன்னை பார்க்கபோறமோ எண்டு தெரியாது , இதுதான் நான் உனக்கு கடைசியா தாற சாப்பாடு எண்டு அழுகையோட தந்தது மச்சான் எண்டு பீலிங்கோட சொன்னான்.டேய் என்ன மச்சான் இப்பிடி பீல் பண்ணூறாய் உன்னோட அப்பர் இருக்குமட்டும் நீ வன்னியை விட்டு வெளில போகேலாது, அம்மாவோட தான் இருக்கணூம். பீலிங்காட்டாம பார்சல திறமச்சான் பசிக்குது எண்டு ரவி சுதனுக்கு கடுப்பேத்தினான். இரவு சுதன் வீட்டுக்கு எல்லோரும் போனோம். அப்போ சுதனோட அப்பா சிரித்துக்கொண்டே வாசலில் வந்து வரவேற்றார்
வாங்கோ எண்டு. என்ன அங்கிள் ஒருமாதிரி போகவிடாம பண்ணிப்போட்டியள் எண்டு கேட்டோம்.தம்பி உந்த முருகன் கோயில் மேல சத்தியமா சொல்லுறன் விடியா அலுவலகத்தில நாங்க இருக்கேக்க வந்து சொன்னாங்கள் ஒரு மீட்டிங்க் இருக்கு வாங்கோ எண்டு ,உன்னான சொல்லுறன் கடைசிவரைக்கும் தெரியாது நாங்கள் எங்க போய்க்கொண்டிருக்கிறம் எண்டு, பிறகுபார்த்தா ஜ.நா அலுவலகத்துக்குப்பக்கத்தில கொண்டுவந்து விட்டுட்டு சொன்னாங்க அப்படி கத்த சொல்லி , பிடிச்சுக்கொண்டு நிக்க போட்டும் தந்தாங்கள். பிறகுதானே எனக்குத்தெரியும் எண்ட மோனும் அதுக்குள்ள தான் இருந்தவன் எண்டு.சரி சரி அப்ப நாளைக்கு என்ன மாதிரி , நாளைக்கும் ஆர்ப்பாட்டம் இருக்காமோ?
எண்டு ரவி கேட்க , யாருக்கடா மோனே தெரியும், விடிஞ்சாப்பிறகுதான் தெரியும் என்ன நடக்கபோது எண்டு சொல்லவும் எங்களுக்கு மீண்டும் ஒருதடவை பயணம் தடைப்படுமோ எண்டு கவலை வந்திச்சு. நல்லவேளை அடுத்த நாள்
சமர்சம் பேசி வவுனியா வந்து சேர்ந்தோம். சுதனோட அப்பாவும் அம்மாவும் இறுதிவரைக்கும் அங்கே இருந்தவை,கடைசில காயப்பட்டு முகாமில வந்து இருந்திச்சினம் , இப்போ திரும்பி கிளிநொச்சிக்கு போய்ட்டினம்.

இநத சம்பவம் எம்மக்கு மறக்கமுடியாத ஒரு நினைவாக இன்றும் இருக்கிறது.

No comments:

Post a Comment