Thursday, May 13, 2010

நாய்களுடன் போட்டியிடும் மனிதர்கள்; மானிப்பாயில் பெருகிவரும் "மனிதக்கடி"






குடாநாட்டில் நாய்க்கடியினால் பாதிப்புறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் நாய்களுக்குப் போட்டியாக இப்போது மனிதர்களும் தம் "" பல்வரிசையைக்' காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் சக மனிதர்களால் கடியுண்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் கடந்த மாதத்தில் மட்டும் மூன்று பேர் இவ்வாறு மனிதக் கடியால் பாதிப்புற்று சிகிச்கை பெற்றுள்ளனர்.
தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவரும் வெறிகொண்டு பரஸ்பரம் ஒருவரையொருவர் கடித்துக் குதறியதில் காயமடைந்து ஒருவர் வைத்திய சாலையில் சிசிக்சை பெற்றுள்ளார்.
இதேபோன்று வீதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரைச் சமாதானப் படுத்துவதற்காகச் சென்ற ஒருவருக்கும் ""மனிதக்கடி'' பரிசாகக் கிடைத்துள்ளது.
மேலும் பாடசாலை ஒன்றில் தகராறு காரணமாகக் கடிபட்ட மாணவர் ஒருவர் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதேவேளை இவ்வாறு சக மனிதர்களால் கடியுண்டு பாதிப்புறுபவர்கள் தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதோடு தடுப்பூசியும் கட்டாயமாக ஏற்றிக் கொள்ள வேண் டும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment