Friday, May 14, 2010

குடாநாட்டின் அமைதிக்கு மேலும் கடும் நடவடிக்கை சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் படைத்தளபதி




குடாநாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் வன்செயல் தொடர்ந்து இடம்பெறும் பட்சத்தில்தேவைப்படும் பட்சத்தில் மேலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். யாழ்ப்பாண மக்கள் பீதியும் அச்சமுமின்றி வாழ வசதியாக கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசு முடிவு செய் துள்ளது. யாழ். பிராந்திய படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்றத்தில் நேற்று முற்பகல் சட்டத்தரணிகளுடன் நடத்திய சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித் தார்.
இச்சந்திப்பில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜாவும் கலந்துகொண் டார்.
மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க நேற் றைய சந்திப்பில் மேலும் கூறியவை வரு மாறு:
குடாநாட்டில் தொடரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசு உறுதிபூண்டுள்ளது. இச்சம்பவங்களுக்கு காரணமான சூத்திரதாரிகள் பலரை நாம் கைதுசெய்துள்ளோம். தொடர்ந்தும் பொலி ஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வன்செயல்களுக்குப் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து, சட்டம் ஒழுங்கைப் பேணி, மக்களின் பீதியையும் அச்சத்தையும் நீக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குடாநாட்டில் சாவகச்சேரி மாணவனின் கொலையுடன் தொடங்கி பல்வேறு வன் செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வன்செயல்களால் மக்கள் பீதியும், அச் சமும் அடைந்திருக்கிறார்கள் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. வன்செயல்களை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வுடன் கலந்துரையாடியிருக்கிறேன். சட் டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களின் அச்சநிலையைப் போக்கி அவர்கள் சுமுக மான இயல்பு வாழ்க்கையை வாழ ஏற்பாடு செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர அவரது வழிகாட்டலில் பல நடவடிக் கைகளை எடுத்துள்ளோம்.
பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பலரை அவர்கள் கைது செய்து நீதிமன்றங்களில் நிறுத்தியதுடன், தொடர்ந்து விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக் கைகள் போதாவிட்டால், மேலும் கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. எப்படியாவது மக்கள் மத்தி யில் நிலவும் அச்சத்தையும் பதற்றத்தை யும் நீக்கி நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களைப் போன்று சுமுகமான இயல்பு வாழ்க்கையை குடாநாட்டு மக்க ளுக்கும் உறுதிப்படுத்த அரசு நடவடிக் கைகளை எடுத்துள்ளது.
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால்
பாதுகாப்பு வழங்கப்படும்
பல வருடங்களாக இடம்பெற்ற யுத்தத் தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக் கள் இன்னமும் அச்சத்துடன் வாழும் நிலைக்கு இடமளிக்கக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சுச் செயலர் எமக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அவரது வழிகாட்டலில் சுமுகமான, அச்சமற்ற, வாழ்வை மக்கள் அனுபவிக்க ஏற்பாடு செய்வோம்.
நீதிபதிகளுக்கோ, சட்டத்தரணிகளுக் கோ, வேறு எவருக்கோ அச்சுறுத்தல் விடுக் கப்பட்டால், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நாம் வழங்குவோம்.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டப் பங்காளிகளாக இருக்கும் நீதித் துறையினரும் சட்டத்தரணிகளும் அந்தப் பணியை செம்மையாக முன்னெடுக்க உதவவேண்டும்.
சட்டத்தரணிகள் தமது பகிஷ்கரிப்பை நிறுத்தி சட்டம், ஒழுங்கை நிலைநாட்டத் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும். இந்தச் செய்தியை உங்களிடம் விடுக்கு மாறு பாதுகாப்புச் செயலர் என்னைப் பணித்தார். அதன் பிரகாரம் உங்களைச் சந் தித்து அச்செய்தியை விடுக்கிறேன்'' என்றார்

No comments:

Post a Comment