Sunday, May 16, 2010

பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 1 ம் ஆண்டு வீரவணக்கம்


1986 ம் ஆண்டுதான் முதன்முதலாக சொர்ணம் அண்ணாவைப்பார்த்தேன், தாடிச்சிறி அண்ணாவுடன் வீட்டுக்கு வந்தபோதுதான். அன்று அவர்கள் திருகோணமைலையில் இருந்து ஒரு காரை கொண்டுவந்திருந்தனர். அது அரசாங்கத்துக்கு சொந்தமானது.அதை எப்படியோ கடத்திக்கொண்டு வந்துவிட்டனர்.தாடிச்சிறி அண்ணாதான் அப்போ யாழ் மாவட்டத்துக்கு வாகனப்பொறுப்பாளராக இருந்தார்.புதிதாக வாகனங்கள் கொண்டு வந்து எங்கட் வீட்டிலும் பெரியம்மா வீட்டிலும்தான் இயக்க பெயின்ற் கலர் மாத்துவார்கள்.அப்போது நான் சிறுவனாகா இருந்தேன். அன்று எனது பிறந்த நாள் அதனால் சொர்ணம் அண்ணாவும், தாடிச்சிறி அண்ணாவும் கண்டோஸ் வாங்கித்தந்தனர்.அன்று அவர்கள் கொண்டு வந்த அந்த காருக்கு அருகில் நின்று எடுத்துகொண்ட எனது பிறந்தநாள் படம் இன்றும் பொக்கிசமாக காத்துவருகிறேன். இந்தியன் ஆமி வந்து சண்டை தொடங்கினநேரம் எமது வீட்டில் சொர்ணம் அண்ணாவும் அவர்களின் வாகனமும் எமது வீட்டில் நின்றிருந்தன, அதை அறிந்து எமது வீட்டுக்கு அதிகாலை 6 மணியளவில் ஆமி அடித்த செல் வந்து வீட்டு கிணற்றடியில் விழுந்தில் அதிஸ்டவசமாக அம்மா தூக்கி எறியப்பட்டு காயங்களுடன் உயிர்தப்பினார். உடனேயே அந்த இடத்துக்கு வந்த சிறி அண்ணாவும் ,இம்ரான் அண்ணாவும் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருந்து கட்டிவிட்டு எங்களை சாவகச்சேரி போக சொல்லிவிட்டார்கள், அவர்களிடம் வீட்டுத்திறப்பை கொடுத்துவிட்டு நாங்கள் போய்விட்டோம், அதற்குப்பிறகு இந்தியா ராணுவம் யாழ்ப்பாணம் கைப்பற்றியதைதொடர்ந்து நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம்,ஆனால் எமது வீட்டில் ஒரு பொருள்கூட களவு போகவில்லை.அதற்குபிறகு 1990 ம் ஆண்டு
இந்தியா ராணுவம் போன பிறகு ஒருநாள் திடீரென்று ஒரு பிக்கப் வாசலில் வந்து நிண்டிச்சு பார்த்தா பல பேர் இறங்கி பாதுகாப்பு கொடுக்க தம்பியா எண்டு சந்தோசத்தோட வந்து என்னை துக்கி கொஞ்சிவிட்டு அம்மா,அப்பவுடன் கதைத்தார்,தாடிச்சிறி அண்ணா கடைசியா கரும்புலியா போன அந்த நாட்களை அம்மா சொல்லி அழத்தொடங்க அக்கா இது விடுதலைப்போராட்டம் , எல்லாரும் உயிரோட இருக்கணும் எண்டால் போராடேலாது, உங்கட மகனை நீங்க தரமாட்டீங்களோ எண்டு என்னைப்பார்த்து கேட்க பிறகென்ன வழமையான சண்டைதான் , அப்போது அப்பா வைத்திருந்த சிவபு நிற ஹொண்டா 200 மோட்டர் சைக்கிளை சொர்ணம் அண்ணா தந்து தேவைக்காக வாங்கிக்கொண்டார்.அதற்குபிறகு எனக்குபார்க்கக்கிடைக்கவில்லை.
ஆனால் அவரது போராட்ட வீர்ச்செயல்கள் அடிக்கடி அப்போது பேப்பரில் வந்து கொண்டிருந்தன.ஆனால் 2006 ல் என்னை கட்டாய ஆட்சேர்ப்பில் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்,அப்போ எனது குடும்பம்,அத்தோடு இயக்க உர்ற்பினர் தொடர்பு பற்றி கேட்டபோது நான் சொர்ணம் அண்ணாவைப்பற்றி சொன்னதும் ,அவ்ரை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள், அவர்களும் ஞாபகப்படுத்தி என்னுடன் உரையாடிவிட்டு, என்னை விடுவிக்க அனுமதி கொடுத்தார்.என்னை வந்து சந்திப்பதாக கூறினார்,ஆனால் கள நிலைமைகாரணமாக சந்திக்க முடியாமல் போய்விட்டது.
இறுதி நாட்களில் பல ஊடறுப்பு சமர்களை நடத்திய இவர் 15 ம் திகதி சண்டையின் போது பலத்த காயமைடைந்து சயனைட் கடித்து வீரமரணமைடந்தார்.அவர்து மனைவி பிள்ளைகள் மெனிப்பாம் முகாமில் தான் இருந்தார்கள்,ஒரு சிலரின் காட்டிக்கொடுப்பால் ராணுவத்தினர் கைது செய்து அழைத்துப்போயுள்ளனர். சொர்ணம் அண்ணாவின் நினைவுகளும் அவர் சமர்க்களமாடிய அந்த நாட்களும் என்றும் எம்மை விட்டு நீங்காது.அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

1 comment: