Thursday, May 13, 2010

இலங்கையின் முறையற்ற துடுப்பாட்டத்தால் இறுதிப் போட்டிக்கான கணவு கானல் நீரானது


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் இலங்கையின் முறையற்ற துடுப்பாட்டத்தால் இறுதிப் போட்டிக்கான கணவு கானல் நீரானது.

சென் லூசியாவில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஜயசூரிய ஒரு ஓட்டத்துடனும், மற்றும் ஜெயவர்த்தன 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த டில்சான், சங்ககார ஆகியோரும் குறைவான ஒட்டத்துடன் ஆட்டமிழந்நதனர். எனவே ஆரம்ப துடுப்பாட்டமே சிறப்பாக இல்லாதமையால் முதல் கோணல் முற்றிலும் கோணல் போன்றதாயிற்று.

இதனை தொடர்ந்து வந்த இலங்கை அணியின் ஏஞ்சலோ மெத்தியூஸ் தனது பொறுமையான ஆட்டத்தால் 58 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க இதன் பின்னர் வந்த ஏனைய வீரர்களும் 10க்கு குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்நதனர்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்தை வீசியிருந்தனர்.

எனினும் 129 எனும் இலகுவான வெற்றிலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ஓட்டங்களை பெற்று 24 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் விளையாடுவதற்கு தெரிவானது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் பீட்டர்சன் 42 ஓட்டங்களையும், லம் 33 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய போர்ட் தெரிவு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment