Tuesday, May 25, 2010

ஆயுத முகவரின் இரட்டை வேடம்! புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் ஒரே கருவிகள் விற்பனை?

சிறீலங்கா படைகளுக்கு தொலைத்தொடர்புக் கருவிகளை விற்பனை செய்த ஆயுத முகவர் ஒருவர், அதே ரகத்தை சேர்ந்த கருவிகளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் டெய்லி மிரர் நாளேடு, முல்லைத்தீவில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான தொலைத்தொடர்புக் கருவிகள் கைப்பற்றப்பட்டதாகவும், இதே ரகத்தைச் சேர்ந்த கருவிகள் படையினரின் வசமிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இவற்றை இரு தரப்பினருக்கும் ஒரே ஆயுத முகவர் விற்பனை செய்திருப்பதோடு, சிறீலங்கா படையினரின் தொலைத்தொடர்புக் கருவிகளை முடக்குவதற்கான உபகரணங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாகவும் டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment