Wednesday, May 19, 2010

போர்க் குற்றங்கள்: புதிய வீடியோ மீண்டும் லண்டன் சனல்-4இல்ஆதாரங்கள் உண்டு என்கிறது தொலைக்காட்சி

இலங்கையில், இராணுவத்தினரிடம் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் என்று கருதக்கூடிய தமிழ் இளைஞர்கள் பலர்
ஆடைகள் களையப்பட்ட நிலையில், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, பதுங்குகுழி ஒன் றுக்குள் அமர்ந்திருப்பதையும்
இராணுவத்தினர் அவர்களைச் சூழ்ந்து ஆயுதங்களுடன் நிற்பதையும் காட்டும் வீடியோக் காட்சி ஒன்றைப் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி காண்பித்துள்ளது.
இதே தொலைக்காட்சி, கடந்த வருடத்தில் தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில், இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் வீடியோக்காட்சியை வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ புகைப்படக் காட்சிகள் உண்மையானவை என்பதை ஆதாரபூர்வ மாக, விஞ்ஞான ரீதியாக, நிரூபிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் "சனல் 4' அறி வித்திருக்கின்றது.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இர கசிய விசாரணைகளின்போது இந்த ஆதா ரங்கள் கிடைத்துள்ளன. இராணுவத்தினர் அளித்த வாக்குமூலங்கள் யுத்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பனவாக அமைந்துள்ளன என்றும் "சனல் 4' தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சனல்4 இந்த வீடியோக் காட்சிகளை விசேட ஒளிபரப்பாக வெளியிட்டது.
சனல் 4 தொலைக்காட்சி நிகழ்சியில், மேற்கோள் காட்டப்பட்ட இந்த இராணுவ அதிகாரியின் உண்மையான குரல் ஒலி பரப்பப்படவில்லை. அவரது உருவம் தெளி வாகக் காட்டப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியில் அவரது குரலுக்குப் பதிலாக வேறொரு குரல் ஒலிக்கவைக் கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரனின் இளையமகனான 13 வயது டைய பாலச்சந்திரன் அவரது மெய்க்காப் பாளர்களுடன் இலங்கைப் படைகளிடம் சரணடைந்தபோது,அவரது தந்தை எங்கே என்று விசாரிக்கப்பட்ட பின்னர், சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் இந்த இராணுவ அதிகாரி கூறினார்.
இந்த விடயத்தில் ஐ.நா. பாதுகாப்புச் சபையினதும், செயலாளர் நாயகத்தினதும் செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கக் கூடிய வையாக அமையவில்லை என்று சாடி யுள்ள "சனல் 4' இதுபற்றி மேலும் தெரி வித்துள்ளவை வருமாறு:
2009 ஓகஸ்டில் சீருடை அணிந்த இலங்கை இராணுவத்தினரால் தமிழர்கள் நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொல்லப்படு வதைக் காண்பிக்கும் வீடியோ ஆதாரங் கள் கிடைத்தன.
ஐக்கிய நாடுகள் சபை இது உண்மை யானது என உறுதி செய்தது.
அனைவரையும் கொலை செய்ய உத்தரவு!
மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தர வின் பேரிலேயே இவ்வாறான கொலை கள் இடம்பெற்றன என இலங்கை இராணு வத்தின் மூத்த தளபதியொருவரும், இராணு வச் சிப்பாயும் அப்போது எமக்குத் தெரி வித்தனர்.
""எமது தளபதி அனைவரையும் கொலை செய்யுமாறு உத்தரவிட்டார். நாங்கள் அனைவரையும் கொன்றோம்'' என முன் னரங்குகளில் பணிபுரியும் சிப்பாய் ஒருவர் தெரிவித்தார்.
""நிச்சயமாக அனைவரையும் தீர்த்துக் கட்டிவிடுமாறே உத்தரவு பிறப்பிக்கப்பட் டிருக்கும்'' என இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரியொருவரும் தெரிவித்தார்.
தீவிரபோக்குடையோர்
சுட்டுக்கொல்லப்பட்டனர்
""தீவிர போக்குடைய எவரையும் உயி ருடன் வைத்திருக்க விரும்பினோம் என நான் கருதவில்லை. இதன் காரணமாக அவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறான உத்தரவுகள் மேலிடத்திலிருந்தே வந்தன என்பது தெளிவான விடயம்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றன எனக் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும், இலங்கை அரசு இதுவரை சுயாதீன விசாரணையைத் தவிர்த்து வந்துள்ளது.
எனினும், யுத்தக்குற்றங்கள் இடம் பெற்றமைக்கான தடயங்கள் தொடர்ந்தும் கிடைக்கின்றன.
இலங்கை அரசு விடுதலைப் புலி களுக்கு எதிராகப் பெற்ற வெற்றியின் முக்கியத்துவம் காரணமாக, கிளர்ச்சிகளை எதிர்கொள்ளும் ஏனைய நாடுகளும் இலங்கை அரசின் முன்மாதிரியைப் பின் பற்ற முயல்கின்றன. சர்வதேச சட்டத்தை இலங்கை அரசு மீறியது என சர்வதேச வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர் வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
இலங்கை அரசு மோதலில் ஈடுபட்ட வர்களையும், ஈடுபடாதவர்களையும் பிரித் துப் பார்க்கத் தவறியதன் மூலமும், பொது மக்களைக் கொலைசெய்தது மற்றும் அவர் களுக்குத் துயரங்களை ஏற்படுத்தியதன் காரணமாகவும் சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்குப் பெரும் பங்கத்தை ஏற் படுத்தியது என ஐக்கிய நாடுகளின் முன் னாள் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் லண்டனில் இடம்பெற்ற நிகழ்வில் குறிப்பிட்டார் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment