Sunday, May 16, 2010

அரசுக்கும் நீதித்துறைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி குடாநாட்டின் சிவில் நிர்வாகத்தைக் குழப்பிவரும் யாழ். மாநகர சபையை உடன் கலைக்க வேண்டும் ஜனாதிபதிக்கு





குடாநாட்டில் அரசின் சிவில் நிர்வாகத் தைக் குழப்பும் வகையில் செயற்பட்டு அரசுக்கும், மாநகரசபைக்கும், நீதித்துறைக் கும் அபகீர்த்தியை உண்டுபண்ணிநிற்கும் யாழ். மாநகரசபை நிர்வாகத்தைக் கலைப்ப தற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று அனுப்பியுள்ள அவசரக் கடிதம் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மேற்கண்டவாறு கேட் டுள்ளார்.

அந்தக் கடிதத்தின் முழு விவரமும் வரு மாறு :

குடாநாட்டு மக்களை இன்று அச்சத்தின் விளிம்பில் உட்கார வைத்திருக்கும் கடத்தல் சம்பவங்களுக்கு பிள்ளையார் சுழிபோட்ட
நிகழ்வு, சாவகச்சேரியில் கபிலநாத் என்ற மாணவன் கடத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தான். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஈ.பி.டி.பி.அமைப்பின் தென்மராட்சிப் பொறுப்பாளர் சாள்ஸ் மற்றும் யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வராக உள்ள றீகன் ஆகிய இருவரும் ஆயுதங்களுடன் குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் வீட்டுச் சூழலில் அச்சுறுத்தும் வகையில் நடமாடியுள்ளனர். இதன் பின்னர் பொலி ஸாரால் இவ்வாறு நடமாடிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் பிரதி முதல்வராக உள்ள ஒருவரை அபாண்டமான முறையில் குற்றஞ்சாட்டி நீதித்துறை கைது செய்து விட்டதாகவும் இதனால் மாநகர சபையைச் சேர்ந்த அத்தனைபேரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் மாநகரசபையின் ஆணையாளருக்கு அறிவிக்காமல் மாநகர சபை முதல்வரால் தன்னிச்சையான முறையில் பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்று பிரசுரிக் கப்பட்டது. அத்துடன் அடுத்தநாள் பணிக்குச் சென்ற ஊழியர்களை மாநகர சபை முதல்வரே முன்னின்று திரும்பி அனுப்பிய சம்பவ மும் நிகழ்ந்தது. அதன் பின்னர் நீதித்து றையின் செயற்பாடுகளுக்குக் களங்கம் கற்பிக்கும் குறித்த விளரம்பரம் தொடர்பாக மாநகர சபை முதல்வரை அழைத்து நீதிமன்றம் எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை வளர்ந்து விட்டது.
சட்டத்திற்கு முரணான செயலில் யாழ். மாநகரசபை
அரசின் செயற்பாடுகளை உறுதியாகவும் மக்களுக்கான பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ளவுமே மாநகர சபை போன்ற நிர்வாகக் கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப் பட்டன. ஆனால் அதற்கு மாறாக அரசின் நிர்வாகக் கட்டமைப்பை சீர்குலைத்து, நீதித்து றையைக் களங்கப்படுத்தி சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை யாழ்.மாநகர சபை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.
மாநகர சபையிலுள்ள உறுப்பினர்களின் கருத்துகளுக்கு எவ்வித செவிசாய்ப்பும் இன்றி, தன்னிச்சையான முடிவுகளையே மாநகர சபை முதல்வர் எடுத்து வருகின்றார். இப்போது மாநகர சபை ஒரு கட்சியின் அலுவலகக் கிளைபோலவே செயற்பட்டு வருகின்றது. எனவே அரசுக்கு தொடர்ந்தும் அபகீர்த்தியை ஏற்படுத்தி மக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணி, தவறான பாதையில் தொடர்ந்தும் பயணிக்கும் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தை உடனே கலைக்க அரசு ஆவன செய்யவேண்டும். இதன் மூலமே யாழ். மாநகர சபையை மீண்டும் மக்களுக்குப் பணி செய்யும் சபையாக மாற்ற முடியும் என்றுள்ளது.

No comments:

Post a Comment