![]() |
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான அழுத்தங்கள் தமது எதிர்கால நடவடிக்கைகளைப் பாதிக்கும் என அமைச்சர் கூறியதாக பி.ரி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஐ.நா.சபையின் செயலாளர் நாயகத்தைச் சந்தித்த பிறகு இவ்வாறு தெரிவித்ததாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
போர்க் குற்றங்கள் சம்பந்தமாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கடந்த வாரம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன வலியுறுத்தியிருந்தன.
அதேவேளை, போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கத் தயாராக இல்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment