Monday, May 17, 2010

யாழ். மாநகரப் பிரதி மேயர் இளங்கோ நேற்று நிபந்தனையுடன் பிணையில்

சாவகச்சேரி நீதிவான் ரி.ஜே. பிரபாகர னுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட யாழ். மாநகர பிரதி மேயர் துரைராஜா இளங்கோ (றீகன்) நிபந்தனை யின் அடிப்படையில் நேற்றுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன் னிலையில் இளங்கோ நேற்றுப் பிற்பகல் ஆஜர் செய்யப்பட்டார்.
அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எஸ். சந்திரலால் அவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்து வாதாடினார்.
மனுவை ஆராய்ந்த நீதிவான் பொலிஸாரின் ஆட்சேபனை இல்லாததையடுத்து நிபந்தனையின் அடிப்படையில் அவரைப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
யாழ். நீதி நிர்வாகத்துக்கு உட்பட்ட இருவரின் 50 ஆயிரம் ரூபா ஆள்பிணையிலும், பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நீதிமன்றத்தில் கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலும் நீதிவான் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment