Thursday, April 15, 2010

பழம் சந்தியில் இந்திய கொடூர ராணுவத்துக்கெதிராக நடந்த கரும்புலித்தாக்குதல் 21 ம் ஆண்டு நினைவுகள்



1989 ம் ஆண்டு சித்திரை மாதம் 14 ம் திகதி மாலை நேரம் யாழ்ப்பாணம் பழம் சந்தியில் இருந்த இந்திய கொடூர ராணுவத்தினரின் முகாமை முற்றாக தர்த்தழிக்கும் நோக்குடன் ஒரு கரும்புலித்தாக்குதல் திட்டத்தை தலைவர் முன்னெடுத்தார், அதில் முன்னின்று நாடாத்துவதற்கு தாடிச்சிறி என்று எம்மால் அழைக்கப்பட்ட சிறி அண்ணா தலைமை தாங்குகினார்.
இந்திய ராணுவம் யாழ் பல்கலைக்கழகம் அருகே முகாம் அமைத்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவ மாணவிகளை சோதனை என்ற பெயரில் சித்திரவதை செய்து வந்தது. இதற்கு உடந்தையாக ஈ.பிஆர்.எல்.வ் தேசத்துரோகிகளும் இருந்த்தனர். இதில் கொடுமை என்னவெனில் பல மாணவிகளை சோதனை என்ற பெயரில் அவர்களின் அங்கங்களை தொடுவதிலும் பாலியல் அத்துமீறல் புரிவதிலுமே அவர்கள் முக்கிய குறியாக இருந்த்தனர்.இதற்கெல்லாம் முடிவு கட்டும் நோக்குடனேயே இந்த தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது.
அதுவரை எம்முடன் இருந்த சிறீ அண்ணா இதைப்பற்றி ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. பல ராணுவக்கெடுபுடிகளுக்குள்ளும் எமது வீட்டிலும் அவரது வீட்டிலுமாக அங்குமிங்குமாக ஓடித்திரிந்த அவர் இந்த முடிவை எடுப்பாரென நாமெல்லாம் எண்ணிக்கூடப்பார்க்கவில்லை. அப்போது எனக்கு 9 வயது. ஏப்ரல் 13 ம் திகதி மாலை என்னை " தம்பியா இங்கே வா, போய் கடையில் சின்னக்காபெரியக்கா ,உனக்கு அக்கா எல்லாருக்கும் ஜஸ்கிரீம் வாங்கிட்டு வா என்று என்னிடம் பணம் தந்து என்னை கடைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் எல்லோரும் ஜஸ்கிரீம் சாப்பிட்டவுடன் நானும்அக்காவும் ரியூசனுக்குப் போய்விட்டோம்.
அதன்பிறகே அம்மாவிடம் இந்த தாக்குதல் திட்டத்தை கூறியிருக்கிறார், ஆனாலும் முழுதாக கூறவில்லை. அக்கா நாளைக்கு பெரிய ஒரு நிம்மதி கிடைக்கப்போகிறது, ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்கும் ,ஆனாலும் நான் திரும்பி வருவேன் ,வராவிட்டால் நான் வீரமரணம் என்று நினைச்சுக்கொள்ளுங்கோ எண்டு சொல்லிவிட்டு வெளிக்கிட்டு போய்விட்டார், அம்மாவும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் பிரயோசனமில்லை.நாட்டுக்காக தன்னை ஈகுதியாக்க அவர் எடுத்த முடிவில் எந்தவித மாற்றமுமில்லை.
உண்மையில் அன்று வாகனத்தில் வெடிமருந்து ஏற்றி இந்திய ராணுவ முக்கமினுள் வேகமாக ஓட்டிச்சென்று மோத விடுவது என்பதுதான் திட்டம்.ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. அது ஒரு மூன்று சந்தி,அதாவது கெட்டப்போல் மாதிரி, பாலாலி வீதியில் பழம் சந்தி வந்து இணையும் இடம், இவர்கள் 1989 ம் ஆண்டு 14 ம் திகதி மாலை 4 மணிக்கு தாக்குதல் நடத்த வாகனத்தில் போய்க்கொண்டிருந்த போது பழம் சந்தியில் இருந்து ஒரு குடிகாரன் மோட்டர் சைக்கிளில் வந்து எதிர்பாராவிதமாக இந்த வாகனத்துடன் மோதி விடுகிறான். அந்த இடத்திலேயே வெடிமருந்து நிரப்பிய வாகனம் வெடித்து சிதறுகிறத்து. இன்னும் 50 மீட்டர் தூரமே ராணுவமுக்காம் இருந்தது.அனைத்தும் வீணாகிப்போயின.அப்போது நான் எமது கோயில் சுவாமி வீதிவலம் வந்து கொண்டிருந்த்தது, அதனுடன் போய்க்கொண்டிருந்தேன்.அப்போ அந்த வெடிச்சத்தம் எம்மை உலுக்கியது ,உடனேயே என்னையும் அக்காவையும் தேடி வந்த அம்மா வீட்டிற்குள் கூட்டிச்சென்று அழத்தொடங்கிவிட்டார். அன்று இரவு எம் வீட்டுக்கு வந்த போராளி சொன்னார் சிறீ அண்ணா, கரன் அண்ணா எல்லாரும் வீரவணக்கம் எண்டு... அன்று எனது சிறு வயதில் பதிந்த அந்த வடு இன்று கூட மறக்க முடியாமல்...சிறி அண்ணாவை என்க்கு 1985 ம் ஆண்டில் இருந்தே தெரியும்,அவரில் கைகளுக்குள்ளேயே வளர்ந்த்திருந்தேன்.இந்தியா ராணுவத்திடம் ஆயுதங்களை கையளித்தபோது எனக்கு அந்த வயதிலும் எமது காணிக்குள் வைத்து பிஸ்டல் சுட்வதை சொல்லித்தந்தார், வீணா அவங்களிட்ட நம்மோட ஆயுதங்களை கொடுக்கக்கூடாது எண்டு அன்று அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் என்காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
அவருடனான நினைவுகளைப் பற்றி தொடர்ந்த்தும் எழுதுவேன்

தாடிசிறி அண்ணா 1984 ம் ஆண்டு தன்னை விடுதலைபோரட்டத்தில் இணைத்து கொண்டார்,பின்னர் இவரின் சிறப்பான நடவடிக்கைகளை பார்த்த தலைவர் இவரை யாழ் மாவட்டத்துக்கான வாகனம், மற்றும் வெடிமருந்து சப்ளைக்கு பொறுப்பாக நியமித்தார். அன்றைய காலகட்டத்தில் ஏதாவது புதிய வாகனம் வாங்கினாலோ, அல்லது இலங்கை ராணுவத்தினரிடமிருந்து கடத்தி வரப்பட்டாலோ எமது காணிகுள்ளே கொண்டு வந்துதான் பெயிண்ட் மாற்றுவார்கள், அப்போதே அவர்களுடனும் நானும் சிறுவன் என்ற எண்ணம் கடந்து ஒரு போராளியாகவே கருதி அவர்களின் ஒவ்வொரு வேலையையும் நுணுக்காமாக ஆராய்வேன் . கிட்டு மாமா,சொர்ணம் ,இம்ரான்,பாண்டியன்,திலீபன்,ஊத்தை ரவி,போன்ற தளபதிகளை எனக்கு நேரில் பார்த்து பழகும் வாய்ப்பு கிடைத்திருந்த்தது...... 1986 ம் ஆண்டு காலப்பகுதியில் சுதுமலையில் அமைந்த்திருந்த கிட்டு அவர்களின் முகாமை தகர்க்கும் நோக்குடன் சிறிலங்கா ராணுவம் ஒரு அதிரடி தாக்குதலை தமது விமானப்படையுடன் இணைந்து மேற்கொண்டது......

தொடரும்.....

No comments:

Post a Comment