Monday, April 12, 2010

பிரிகேடியர் கடாபி உயிருடன் இராணுவ வதை கூடத்தில்




தலைவர் அவர்களினால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு தளபதி பிரிகேடியர் கடாபி ஆவார். இவரை ஆதவன் என்றும் அழைப்பார்கள்.இவர் 1986 ம் ஆண்டுகாலப்பகுதியில் இருந்தே தலைவரின் மெய்க்காப்பாளராக செயற்பட்டு வந்தார். இவரின் வச்ச குறி தப்பாத துப்பாக்கி சூட்டுத்திறன்னையும்,விசேட தாக்குதல் திட்டவடிவமைப்புத்திறனையும் கண்டு வியந்த தலைவர் பல்வேறு அதிரடி தாக்குதல்களுக்கான பயிற்சி ஆசிரியராக தளபதி பிரிகேடியர் கடாபியை நியமித்திருந்தார்.அதிலும் அதிகாரிகள் பயிற்சி கல்லூரியை ஆரம்பித்து வைத்து போராளிகளுக்கான விசேட பயிற்சிகளை வழங்கும் பொறுப்பையும் இவரிடமே ஒப்படைத்திருந்தார்.விசேட கரும்புலித்தாக்குதலுகளுகான பயிற்சிகளை வழங்குவதில் இவர் நிபுணர் என்றே கருதப்படுகிறது.சென்ற ஆண்டு ஆனந்தபுரம் தாக்குதலில் தலைவர் உட்பட அனைத்து போராளிகளும் 25000 மேற்பட்ட சிங்கள ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட போது மிகவும் தீரத்துடன் போராடி தலைவரை பாதுகாப்பாக வெளியேற்றியவர்களில் இவரின் பங்கு அளப்பெரியது.அப்போது இவர் வீரமரணம் எய்தியதாக சொல்லப்பட்டாலும் அண்மையில் கிடைத்த தகவலின் படி கடாபி வர்கள் இறுதிவரை காயங்களுடன் போராடிக்கொண்டிருந்தார் என்றும் அனைத்து துப்பாக்கி தோட்டாகள் முடிந்த பின்பு காயங்களுடன் இருந்த தம்மை கைது செய்ய வந்த ராணுவத்தினருடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் ,சயனைட் கடிக்கமுன்பு ராணுவத்தினர் இவரை கைது செய்து தற்போது முல்லைத்தீவு சித்திரவதை முகாமில் வைத்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்தி தெரிவிக்கின்றது..





பிரிகேடியர் கடாபி உயிருடன் இராணுவ வதை கூடத்தில்

No comments:

Post a Comment