Tuesday, April 13, 2010

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வீடு அழிப்பு - சிறீலங்காவின் இனத்துவேச வெளிப்பாடு



சிறீலங்கா அரசின் இனத்துவேச வெளிப்பாடக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வீடு அழிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் இல்லம் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்போராட்ட வராலற்றில் மாவீரர்கள் போற்றி வணங்கப்பட்டு வந்துள்ளார்கள். ஒரு நாட்டின் போர் வீரர்களை அன்நாட்டு மக்கள் நினைவிற்கொள்வது வழமை. இன்நிலையில் வன்னியில் மாவீரர்களின் துயிலும் இல்லங்களை மற்றும் நினைவாலயங்களை அழித்த சிறீலங்காப்படையினர் தமிழர்களின் போர் மரபுகளையும் அழித்துள்ளார்கள். தமிழர்களின் வரலாற்றின் தொன்மைகளையும் அழித்துள்ளார்கள்.

கைச்சிலை மடுவில் உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவாலயமும் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்கள் வாழ்ந்தார்கள், போராடினார்கள், வரலாறு ஆனார்கள் என்பதை எடுத்துக்காட்டும் நினைவுச் சின்னங்களாக மாவீரர்களின் நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன.

வன்னியில் உள்ள மாவீரர்களின் நினைவுச்சின்னங்களை அழித்துவிட்ட சிங்களப்படையினர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபியினையும் அழித்துள்ளார்கள். இவ்வாறு தமிழ் மக்களின் வரலாறுகளை சிங்கள பேரினவாதம் அழித்துவரும் நிலையில் இவ்வாறன நிகழ்வுகளை எடுத்துச் சொல்ல முடியாமல் யாழ்பாணத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் காணப்படுகின்றன. அதாவது சிறீலங்கா அரசிற்கு இசைபாடிக்கொண்டிருக்கின்றன.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையானது யாழ்ப்பாணம் என்று ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதும் யாழ்ப்பாணத்தின் முதன்மை நாளிதள்களால் தமிழ் மக்களின் வரலாற்றினை காப்பாற்ற முடியவில்லை. இவ்வாறுதான் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரும். மாவீரர்களின் அர்பணிப்புக்களில் வாழ்ந்தவர்களில் தமிழ்தேசியக்கூட்டமைப்பினரும் அடக்கம்.

பன்நாட்டு மக்கள் இதனை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்தில் திலீபன் அவர்களின் சிலை உடைக்கப்படுவதாக தமிழ் மக்களால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிடப்பட்டபோதும் இவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை என்று முறையிட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.





No comments:

Post a Comment