
புதிய அரசில் 35 இற்கும்  குறைவான அமைச்சர்களே இடம்பெறுவர் என்ற தக வல் ஆளும் தரப்பின் உயர்  பீடத்தினால் வெளியிடப்பட்டு வருகின்ற அதேவேளை, அமைச்சரவை அந்தஸ்துள்ள  அமைச்சர்களுக்கு மேலதிகமாகப் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் கள்,  வழிநிலை (டூடிணஞு) அமைச்சர்கள் என பல தரத்தில்  பல மட்டங்களில்   அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆராய்ந்து  வருகின்றார் என சில செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.
அமைச்சரவை  அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு மேலதிகமாகவே பல தரங்களில் அமைச்சர்கள்  நியமிக்கப்படவிருக்கின்றார் கள்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சரின்  கீழ் சில பிரதி அமைச்சர்கள் அல்லது வழி நிலை அமைச்சர்கள் நியமிக் கப்படலாம்  எனக் கூறப்படுகின்றது.
மாவட்ட ரீதியில்
வழிநிலை அமைச்சர்கள்
அதிலும்  வழிநிலை அமைச்சர்கள் மாவட்ட ரீதியில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும்,  சம்பந்தப்பட்ட அமைச்சின் நடவ டிக்கைகள் அந்தந்த மாவட்டங்களில் சீராக  முன்னெடுக்கப்படுகின்றமைக்கு இவர்களைப் பொறுப்பாக்குகின்றமை குறித்து  ஜனாதிபதி ஆலோசித்து வருகின் றார் எனவும் கூறப்படுகின்றது.
இதேசமயம்,  சர்வதேசத்தின் நவீன முறைமைப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக இலங்கையை  மாற்றுவதற்காக இது சம்பந்தமான விசேட தொழில்நுட்ப அமைச்சுக்களையும்  உருவாக்க ஜனாதிபதி திட்டமிட்டிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.
புதிய  அமைச்சுக்கள், அமைச்சர் தரங்கள் ஆகியவற்றை உருவாக்குவது தொடர்பில் பல்வேறு  நாடுகளிலும் உள்ள அமைச்சரவைக் கட்டமைப்புகளை ஜனாதிபதி ஆராய்ந்து  வருகின்றார் என்றும் அரசுடன் தொடர்புடைய செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.
""ஒட்டுமொத்த  தேசத்தின் வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவை குறித்து மட்டுமல்லாமல்  குறிப்பிடக்கூடிய பிரதேசங்களின் அபிவிருத்தி, முன்னேற்றம் ஆகியவை  குறித்தும் கவனம் செலுத்துவதற்கு ஜனாதிபதி விரும்புகின்றார். அந்த இலக்கை  நிறைவு செய்வதற்காகவே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு மேலதிகமாக  உதவி, பிரதி, வழிநிலை அமைச்சர்கள் பற்றியெல்லாம் ஜனாதிபதி ஆராய்கின்றார்.  பிரதேசங்களின் தேவை கருதி அவசியப்பட்டால் இந்த அடுத்த மட்ட அமைச்சர்  பதவிகளை ஆளும் தரப்புக்கு வெளியில் உள்ளோருக்கும் வழங்குவது குறித்தும்  ஜனாதிபதி சிந்திக்கின்றார்.''  என்று அரசுடன் தொடர்புடைய வட்டாரம் ஒன்று  தெரிவித்தது.
புதிய நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்களின்  விவரம் வர்த்தமானியில் உத்தியோக பூர்வமாக வெளியானதும் அமைச்சர்கள் நியமனம்  உத்தியோகபூர்வமாக இடம்பெறும் எனத் தெரியவருகின்றது.
Thursday, April 15, 2010
அமைச்சர் பதவிகள் புதிய வியூகம் வகுக்கின்றார் ஜனாதிபதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment