Sunday, May 2, 2010

யுத்தத்தின் கொடூரத்தால் கிழக்கில் 49ஆயிரம் பேர் விதவைகளாயினர் அவர்களில் 25 ஆயிரம் பேர் இளம் வயதினர்



யுத்தம் ஏற்படுத்திய பாதிப்பின் காரண மாகக் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என்றும், அவர்க ளுள் 25 வயதுக்கும் குறைந்த பெண்கள் சுமார் 25 ஆயிரம் பேர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 25 வயதுக்கும் குறைந்த விதவைப் பெண்களுள் சுமார் 12 ஆயிரம் பேர



கொழும்பு,மே2
யுத்தம் ஏற்படுத்திய பாதிப்பின் காரண மாகக் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என்றும், அவர்க ளுள் 25 வயதுக்கும் குறைந்த பெண்கள் சுமார் 25 ஆயிரம் பேர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
25 வயதுக்கும் குறைந்த விதவைப் பெண்களுள் சுமார் 12 ஆயிரம் பேர் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தை களின் தாய்மார்கள் என்றும், சிறார்கள் மற் றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சரான திஸ்ஸ கரலியத்த தெரிவிக்கிறார்.
அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் கரலியத்த யுத்தம் காரணமாக அநாதைகளாகிக் கைவிடப்பட்ட நிலை யிலுள்ள சிறார்கள் மற்றும் மகளிர் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும். அத்துடன், அவர்களது உளநலன் மேம்படுத்தப் பட்டு, அவர்களது வாழ்க்கை கட்டியெழுப் பப்படுவது தொடர்பாக வழங்கும் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வும் அமைச்சர் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment