Sunday, May 2, 2010

முறுகண்டியில் சிங்களவர்களுக்கென தனியாக காணி

யாழ்ப்பாணம்-கண்டி ஏ 9 சாலையில் அமைந்திருக்கும் முறுகண்டி ஆலய பகுதியில் இப்போது பெருமளவு மக்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்ததே. ஏ 9 சாலையூடாக பயணிக்கும் சகலருக்கும் அந்த இடத்தில் தங்கி சிறிது நேரத்துக்குப் பின்னரே தமது பயணத்தைத் தொடர்வது வழக்கம்.

எனவே அங்கு வியாபாரமும் அமோகமாக இருக்கும். இந்த முக்கிய இடத்திற்குச் சமீபமாக பாரிய வர்த்தக நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தென்னிலங்கை சிங்கள வர்த்தகருக்கு சில ஏக்கர் காணியை வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேற்படி வர்த்தக நிலையத்தை நிறுவுவதற்கான காணியை உடனடியாக ஒதுக்கிக் கொடுக்குமாறு சந்திரசிறி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

எனவே இது குறித்து அப்பகுதி மக்கள் தமது விசனத்தைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பெருமெடுப்பிலான வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டால் அங்கு சிறியளவில் வர்த்தகம் நடத்தும் தமிழ் வியாபாரிகளின் நிலமை மோசமாகப் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இதுவரை எதுவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இருப்பது மக்களுக்கு மேலும் மனக்கஷ்டமாகியுள்ளது.

No comments:

Post a Comment