Sunday, May 2, 2010

பிரபாகரனின் தமிழீழம் என்ற கொள்கைக் கருவை உயிர்ப்பிக்கும் முயற்சியில் புலம்பெயர் தமிழர்கள் ஆனையிறவு நிகழ்வில் கோத்தபாய தெரிவிப்பு



விடுதலைப் புலிகள் அமைப்பு போர் ரீதியில் தோல்வி கண்டுள்ள போதிலும், புலம்பெயர் தமிழர் தரப்பு வெளிநாடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களது உதவி களைப் பெற்று, பிரபாகரனின் தமிழீழ எண்ணகருவை மீளவும் உயிர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்த


கொழும்பு,மே2
விடுதலைப் புலிகள் அமைப்பு போர் ரீதியில் தோல்வி கண்டுள்ள போதிலும், புலம்பெயர் தமிழர் தரப்பு வெளிநாடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களது உதவி களைப் பெற்று, பிரபாகரனின் தமிழீழ எண்ணகருவை மீளவும் உயிர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரி வித்துள்ளார்.
ஆனையிறவில் நிறுவப்பட்டுள்ள போர் வீரர்களுக்கான நினைவுச் சின்னத்தைக் கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவைத்த நிகழ்விலேயே கோத்தபாய மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:
இந்தச் செயற்பாடுகளை அடியோடு நிறுத்தி முடக்கிவிடுவது தொடர்பாக வெளி விவகார அமைச்சு மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் ஒருங்கிணைந்து செயற்படும் விதத்தில் இப்போது விசேட புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் வெளியுறவு அமைச்சு மற்றும் புலனாய்வுப் பிரிவுகளுக் கும் மிக முக்கிய பொறுப்பு உள்ளது. இது தொடர்பாக இனங்காணப்பட்ட சில நாடு களில் தூதராலயச் சேவைகளுக்கு மூத்த இராணுவ அதிகாரிகளை அமர்த்துவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளி நாட்டுச் செயற்பாடுகள் தொடர்பாகவும் மற்றும் புலனாய்வுச் செயற்பாடுகள் தொடர்பாகவும் மிகவும் தேர்ச்சி பெற் றுள்ள அனுபவம் நிறைந்த இராணுவ அதிகாரிகளே அந்த நாடுகளில் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர் என்றார் கோத் தபாய ராஜபக்ஷ.

1 comment: