Sunday, May 2, 2010

மீள்குடியேறிய மக்களுக்கு உரிய வசதிகள் இல்லை-பிரதியமைச்சர் முரளிதரன்







வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களும் அகதிமுகாம்களிலிருந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதை தான் நேரடியாக அவதானித்தாகவும் அந்த மக்களும் தம்மிடம் இது குறித்துத் தமது அதிருப்தியை வெளியிட்டதாகவும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் வவுனியா மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களுக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியாவில் உள்ள முகாம்களில் இன்னும் சுமார் 73 ஆயிரம் பேர் உள்ளனர்.

இவர்கள் உடனடியாகக் குடி யேற்றப்படவேண்டும். ஒரு இலட்சத்து அறு பத்து மூவாயிரம் பேர் இதுவரை மீள்குடி யேற்றப்பட்டுள்ளனர். இவர் களில் பெரும்பாலானோர் அடிப்படை வசதி கள் எதுவும் இல்லாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் குடியேற்றப் பட்ட மக்கள் மிகவும் மோசமான நிலையி லேயே உள்ளனர். சிறிய குடிசைகளிலேயே அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் இது குறித்து என் னிடம் தமது அதிருப்தியைத் தெரிவித்தனர்.

அகதிமுகாம் மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருப்பதென்பது இனியும் முடியாத காரியம். அந்த மக்கள் கூடாரங்களில் தமது சிறுகுழந்தைகளுடன் பல அசௌகரி யங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இன்றைய நிலையில் அவர்கள் பகலில் வெயிலின் தாக்கத்துக்கும் இரவில் மழையின் அசௌகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் இப்போது இடம்பெற்று வரும் மீள்குடியேற்றமானது விரைவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்காக நான் கூடுதலான நேரத்தைச் செலவிடவுள்ளேன். மீள்குடியேற் றப்படும் மக்களுக்கு இன்று அவசியமாகத் தேவைப்படுவது வீட்டு வசதியே. இது தவிர, அவர்களுக்குத் தொழில் வசதிகளும் விவ சாயம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மிக விரைவாகச் செய்து கொடுக்கப்படவேண்டும். இது தொடர்பில் எமது அமைச்சருடன் பேசி அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளேன். அமைச்சரவை எதிர்வரும் 5 ஆம் திகதி கூடும்போது இது தொடர்பில் திட்ட வரைவொன்றை அமைச்சரூடாக அமைச்சர வைக்குச் சமர்ப்பிக்கவுள்ளேன்.

வன்னிமாவட்டத்தில் மட்டுமல்ல. கிழக்கு மாகாணத்திலும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் நிரந்தர வீட்டு வசதிகள் இன்றியே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவேண்டும். மக்களை மீள்குடியேற்றி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென்றால் வெளிநாட்டு நிறு வனங்களையும் உள்வாங்கியே செயற்பட வேண்டியுள்ளது.

வன்னி மாவட்டத்தில் வீட்டுத் தலைவனை இழந்த குடும்பங்களே அதிகம் உள்ளன. பத்துக் குடும்பங்களை எடுத்துக் கொண்டால் அதில் ஏழு குடும்பங்கள் வீட்டுத் தலைவனை இழந்த குடும்பங்களாகவே உள்ளன. இந்த மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வீடமைப் புத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பல நாடுகள் தயாராகவுள்ளன. வீடமைப்புத் திட்டங்களை உருவாக்கி இலகு கடன் அடிப்படையில் அவற்றினை வீடில்லா தோருக்கு வழங்க பல நாடுகள் முன்வந் துள்ளன. ஆகவே இது தொடர்பிலும் நான் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.

முகாமிலுள்ள மக்களுக்கான உணவு வசதி களை உலக உணவு ஸ்தாபனமும் "சிறுவர் களைப் பாதுகாப்போம்'“ அமைப்புமே வழங்கி வருகின்றன. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இந்திய அரசும் ஓரளவு உதவிகளைச் செய்து வருகிறது. ஆனால், அது போதுமானதாக வில்லை. இந்த விடயத்தில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வவுனியா செயலகத்தில் அதிகாரிகளுடன் நான் நடத்திய கலந்துரையாடலின்போது பல தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். கடந்த வெள்ளிக்கிழமை நான் திடீரென்று இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தேன். விரைவில் நான் உத்தியோகபூர்வமாக வன்னிமாவட்டத் துக்கு விஜயம் செய்யவுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment