Tuesday, May 4, 2010

உடுப்பிட்டியில் அமைந்திருந்த மாவீரர் கல்லறை இடித்து நாசமாக்கப்படடது: சிங்கள அரசின் அட்டுழியம்


சிறீலங்கா இராணுவத்தினால் உடுப்பிட்டியில் அமைந்திருந்த எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் புல்டோசர் கொண்டு முற்றுமுழுதாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இதுதொடர்பில் முன்னாள் தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

யாழ்பாணத்தினை 1996 ம் ஆண்டு சிறீலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்தது முதல் இவ்வாறான இழிநடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேமாதிரி அண்மையில் தேசியத் தலைவர் அவர்களின் வீடு, கரும்புலி மில்லர் நினைவு தூபி, தியதக தீபம் திலீபன் அவர்களது நினைவு சின்னம் ஆகியன இடித்து முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

No comments:

Post a Comment