Tuesday, May 4, 2010

யாழ் மக்கள் மீண்டும் பீதியில்: மீள் குடியேறிய இளைஞன் சுட்டுக்கொலை


வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்து மீள் குடியேற்றப்பட்ட தும்பளையைச் சேர்ந்த இளைறுன் ஒருவர் ஆயுத தாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 26 வயதுடைய சிவலிங்கம் சபேஸ் என்பவரே பருத்தித்துறையில் வைத்து இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவர்.

இந்த சம்பவமானது சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பிற்கு உட்பட்ட சிலிங்கோ காப்புறுதிக் கூட்டுத் தாபனத்திற்கும் வடமராட்சி தொலைத் தொடர்பு கூட்டுத்தாபனத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

2004 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவர் வன்னிக்குச் சென்றிருந்தார்.

கொலை, கொள்ளை, கப்பம்கோரல், கடத்தல் போன்ற சம்பவங்கள் யாழ் குடாநாட்டில் மீண்டும் மிக மோசமாக அதிகரித்துள்ளமை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். சாவகச்சேரி, மானிப்பாய், கட்டுடை ஆகிய பகுதிகளிலேயே அதிகளவிலான கடத்தல் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கடத்தல் மற்றும் கப்பம் கோரல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஞாயிறன்று நடைபெறவிருந்த கண்டனப் பேரணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அறிவிப்பை அடுத்தே, மேற்படி கண்டனப் பேரணி இடைநிறுத்தப்பட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்து மற்றும் கிறிஸ்த மதகுருமார் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழக சமூகம், பொது அமைப்பினர், யாழ் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொள்ளவிருந்த இந்த கண்டனப் பேரணியானது யாழ்.கோட்டை, முனியப்பர் கோவில் முன்றலில் நடைபெறவிருந்தது.

அத்துடன், மேற்பட்டி குற்றச்செயல்கள் தொடர்பில் யாழ் அரசாங்க அதிபர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகம், மற்றும் யு.என்.எச்.சி.ஆர் ஆகியவற்றில் மகஜர்களும் கையளிக்கப்படவிருந்தன.

செட்டிகுளத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் கிணத்திலிருந்து சடலமாக மீட்பு

கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போன இளைஞனின் சடலம் கிணத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இந்த இளைஞன் செட்டிகுளத்தைச் சேர்ந்த ஞானசிங்கம் தனுசன் வயது 26 என இனங்காணப்பட்டுள்ளார். இவரது உடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment